திருவொற்றியூர், சைதாப்பேட்டை நீதிமன்றங்களில் திருமுருகன் காந்தி

- in பரப்புரை

கடந்த வருடம் குண்டர் சட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட தோழர் திருமுருகன் காந்தி, புழல் சிறையிலிருந்து வெளியே வந்து, எதிரே இருந்த தந்தைப் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஏற்கனவே இராயப்பேட்டையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கில் சிறையில் இருக்கும் தோழர் திருமுருகன் காந்தி மீது, தற்போது புழலில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. அவ்வழக்கில், இன்று வேலூர் சிறையிலிருந்து தோழர் திருமுருகன் காந்தி அழைத்து வரப்பட்டு, நண்பகலில் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கவும், மீண்டும் செப்டம்பர் 3 அன்று ஆஜர்படுத்தவும் உத்தரவிட்ட்டார்.

பின்னர் மேலும் இரண்டு புதிய வழக்குகளுக்காக, சைதாப்பேட்டை நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார். குண்டர் சட்ட வழக்கிலிருந்து விடுதலையான பின்பு சென்னை தியாகராய நகரில் காவல்துறை அனுமதியுடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாகவும், கடந்த வருடம் சென்னை எம்.ஜி.ஆர். நகரில், காவல்துறை அனுமதியுடன் நடைபெற்ற ரேசன் கடைகள் மூடப்படுவது குறித்த பொதுக்கூட்டத்தில் பேசியதற்காகவும் இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சைதாப்பேட்டை நீதிமன்ற எண் 17இல் எம்.ஜி.ஆர். நகர் பொதுக்கூட்ட வழக்கிற்காகவும், நீதிமன்ற எண் 18இல் தி.நகர் பொதுக்கூட்ட வழக்கிற்காகவும் ஆஜர்படுத்தப்பட்டு, இரண்டிலும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கவும், மீண்டும் செப்டம்பர் 3 அன்று ஆஜர்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்பின்பு தோழர் திருமுருகன் காந்தியை வேலூர் சிறைக்கு அழைத்து சென்றனர்.

Leave a Reply