மதுரையில் தமிழர் தொல்லியல் சிலைகள் மீட்பு பொதுக்கூட்டம்

மதுரையில் தமிழர் தொல்லியல் சிலைகள் மீட்பு பொதுக்கூட்டம்.

மேற்குலகில் டா வின்சி, மைக்கலேஞ்சலோ போன்ற சிறப்பான ஆளுமைகளின் படைப்புகளுக்கும் மேலான, அவர்களுக்கும் முந்தைய காலத்தில் உலோகத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சிலைகள் களவு போகின்றன எனில் அதன் தீவிரத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இதே போன்று மேற்குலகில் படைப்புகள் களவு போயிருந்தால், இந்நேரம் சர்வதேச செய்திகளாக்கப்பட்டிருக்கும். சர்வதேச தேடுதல் வேட்டை நடத்தப்பட்டிருக்கும்.

அவை கடவுள் சிலைகள் மட்டுமல்ல. அவையனைத்தும் தமிழரின் தொன்ம கலை மற்றும் அறிவின் அடையாளம். ஏராளமான கோடி மதிப்பிலான சொத்துக்கள் திருடப்பட்டிருக்கின்றன. தமிழரின் படைப்புலக வரலாறுகள் மீட்கப்பட வேண்டும்.

சிலை திருட்டு என்பது நம் வரலாறு திருடப்படுவதற்கு ஒப்பானது. கீழடியை அகழாய்வு செய்யாமல் மறைக்கிறார்கள் எனில், வரலாற்று சின்னங்களை காணடிக்கச்செய்து வரலாற்று- கலை-அறிவியல் நுணுக்க ஆதாரங்களை அழிக்கிறார்கள். இச்சிலைகளுடன் காணாமல் போன நம் வரலாறுகள் நமக்கு தெரியாது.. இச்சிலைகளுடன் காணாமல் ஆக்கப்படும் கலைப்படைப்புகளின் ஆளுமை நம் சந்ததிகளுக்கு சொல்லப்படாமல் சாகடிக்கப்படும்.

7000 சிலைகள் திருடிய கும்பலை கைது செய்!
சிலைகளை மீட்டு எடு!

தமிழர்களின் கலை மற்றும் அறிவுச் சொத்தினை காத்திடுவோம். அனைவரும் வாருங்கள்.

ஆகஸ்ட் 4, 2018 சனி மாலை 5 மணி,
அம்பிகா திரையரங்கம் அருகில், அண்ணா நகர், மதுரை.

– மே பதினேழு இயக்கம்
8940110098

 

Leave a Reply