ஜூலை1ம் தேதி ஜெர்மனி, டோர்ட்மண்ட் நகரில் தூத்துக்குடி பயங்கரத்திற்கு எதிரான கருத்தரங்கு

ஜூலை1ம் தேதி ஜெர்மனி, டோர்ட்மண்ட் நகரில் தூத்துக்குடி பயங்கரத்திற்கு எதிரான கருத்தரங்கு

’தமிழ்நாட்டு தமிழர்கள் – தமிழீழ தமிழர்கள்-ஜெர்மன் நாட்டின் முற்போக்காளர்கள்- சிங்கள மனித உரிமை செயல்பாட்டாளர்கள்’ என ஒன்றிணைந்து ‘தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக’ கைகோர்த்து நிற்கிறோம்.

இம்முயற்சியை, இக்கூட்டமைப்பை வலுப்படுத்த புலம்பெயர் வாழும் தமிழக-தமிழீழத் தமிழர்கள் பெரும் திரளாக திரண்டு கை கொடுக்கவேண்டுமென விரும்புகிறோம்.

ஜெர்மன் நாட்டின் ’தி லிங்க்’ கட்சியுடன் இணைந்து மே17 இயக்கம் ஒருங்கிணைக்கிறது. ஐரோப்பாவில் இருக்கும் தமிழக தமிழர்களும், ஈழத் தமிழர்களும் பெருந்திரளாக ஒன்றிணைந்து , இந்த அநீதிக்கு எதிரான வலுவான குரலை பதிவு செய்யவேண்டுமென கோரிக்கை வைக்கிறோம்.

இந்தியாவிற்குள் தமிழனின் குரலை நசுக்கி அழித்துவிட முயலும் முயற்சியை முறியடிக்க வாருங்கள்.

ஜூலை 1 ம் தேதி மாலை சந்திப்போம்.

ஜெர்மனியில் உள்ள தோழர்கள் அனைவரும் பங்கேற்கவும்.

ஜூலை 1, 15:00 மணி, Born str.166, 44145, Dortmund, Germany

 

Leave a Reply