தூத்துக்குடி மக்களை சந்திக்க சென்ற தோழர் வேல்முருகனை விடுதலை செய்

தூத்துக்குடி மக்களை சந்திக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையினை உடனே அகற்ற வலியுறுத்தியும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகளை கொலை வழக்கில் கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் இன்று 29-5-18 சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தினை நடத்தி முடித்துவிட்டு, அந்த மக்களை சந்திக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களை தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து காவல்துறை கைது செய்தது. உணவு மற்றும் தண்ணீர் வழங்காமல் ஒரு இரவு முழுதும் அவரை காவல்துறையினர் ஒரு கட்டிடத்தில் அடைத்து வைத்து யாரையும் அவரை சந்திக்க விடாமல் மோசமான முறையில் நடத்தினர். இதனைக் கண்டித்து 4 நாட்களாக தண்ணீர் கூட அருந்தாமல் புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார் தோழர் வேல்முருகன். தற்போது அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை விடுதலை செய்யவும், ஸ்டெர்லைட் ஆலையை அகற்றவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளை கொலை வழக்கில் கைது செய்யவும் வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தோழர்களும் பங்கேற்றனர். மே பதினேழு இயக்கத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply