தமிழீழம் தமிழ்நாட்டிற்காக நிற்கிறது

**தமிழீழம் தமிழ்நாட்டிற்காக நிற்கிறது**

முள்ளிவாய்க்கால் வடு மறைவதற்கு முன்பாகவே தமிழீழ மக்கள் தூத்துக்குடி மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழீழத்தின் வடமராச்சி, கிளிநொச்சி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் தூத்துக்குடி படுகொலையை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அமைப்பின் சார்பாக ஈழ மக்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்திய மத்திய அரசே! ஈழத்தமிழினத்தை கொன்றொழித்தது போதாதா? தமிழ்நாட்டிலும் தொடர்கிறாய்?

உலகத் தமிழா ஒன்றுபடு! உன் இனம் அழிக்கப்படுகிறது!
என்று பதாகைகளை கையில் ஏந்தியவாறு போராடியுள்ளனர்.

தமிழ்நாடு தமிழீழத்திற்காக நிற்கும். தமிழீழம் தமிழ்நாட்டிற்காக நிற்கும்.

தமிழீழ உறவுகளுக்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் மே பதினேழு இயக்கம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply