கும்பகோணத்தில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம் காவிரிக் கரையான கும்பகோணத்தில் 28-4-18 சனி அன்று மாலை மே பதினேழு இயக்கம் நடத்தியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு என்று சொல்லியும், 378 டி.எம்.சியே எங்கள் கோரிக்கை, 177.25 என்பது ஏமாற்று என முன்வைத்தும், மீத்தேன், பெட்ரோலியம், நிலக்கரி எடுத்து காவிரி டெல்டாவினை பாலைவனமாக்காதே என முன்வைத்தும் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தோழர் சமர்பா குமரன் அவர்களின் எழுச்சிப் பாடல்களோடு பொதுக்கூட்டம் துவங்கியது.

விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தாளாண்மை உழவர் இயக்கத்தின் தோழர் கோ.திருநாவுக்கரசு, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, அருள் முருகன், லெனாகுமார், மே பதினேழு இயக்கத் தோழர் பாலாஜி ஆகியோரும் விரிவான உரையினை நிகழ்த்தினர்.

குடவாசலை சேர்ந்த மாற்றுத்திறனாளி தோழர் மணிகண்டன் “தமிழா தமிழா எழடா எழடா” என்ற மிகச் சிறப்பானதொரு எழுச்சிப் பாடலைப் பாடினார்.

விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, SDPI கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மனிதநேய ஜனநாயகக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிட மனித உரிமை அமைப்பு உள்ளிட்ட தோழமை அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்று தங்கள் ஆதரவினை தெரிவித்தனர். கும்பகோணம் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களும், தமிழ் உணர்வாளர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்கள்.

 

Leave a Reply