காவிரியில் தமிழருக்கு துரோகமிழைக்கும் இந்திய பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையைக் கண்டித்து கருப்புக் கொடி போராட்டம்

காவிரியில் தமிழருக்கு துரோகமிழைக்கும் இந்திய பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையைக் கண்டித்து கருப்புக் கொடி போராட்டம் 12-4-2018 வியாழன் காலை 8 மணிக்கு ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகிலிருந்து துவங்கும் என தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் தோழர் வேல்முருகன் ஒருங்கிணைப்பில் தற்போது நடைபெற்று வரும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்கும் அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் பங்கேற்கின்றன. மே பதினேழு இயக்கமும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளது. தோழர்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்றார்.

Leave a Reply