தமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது?

தமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது?

காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள 378டிஎம்.சி தண்ணிரை இந்தியா தொடர்ந்து மறுத்து வந்துள்ளதோடு அதனை மேலும் மேலும் குறைத்து 177.25டி.எம்.சியாக குறைத்தது. ஆனால் அந்த குறைந்தபட்ச அளவைக்கூட தராமல் இருக்க என்னென்ன வழிவகைகள் உண்டோ அத்தனையையும் இந்திய அரசு தற்போது செய்கிறது. இந்தியா இவ்வாறு தமிழர்களின் மீது இனப்பகையோடு நடக்க பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அதிலொன்று தான் காவிரி டெல்டா பகுதிகளில் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்கள். இதனை எப்படியாவது திருடுவதற்கு தான் விவசாயத்தை அழிக்க காவிரி உரிமையை தமிழர்களுக்கு மறுக்கிறது. உதாரணமாக

கடந்த 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் புதிதாக எண்ணெய் வளங்கள் ஹைட்ரோ கார்பன் இருக்கிற 69இடங்களை இந்திய அரசு கண்டறிந்தது. அதை இந்தியன் ஆயில் கார்ப்ரேசன், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட 22கம்பெனிகளுக்கு எடுக்க அனுமதியும் கொடுத்தாகிவிட்டது. இதில் ஹைட்ரோ கார்பன் அதிகளவில் கிடைக்கும் பகுதியாக கணக்கிடப்பட்டது நமது காவிரி டெல்டா பகுதி தான். இந்த பகுதியை இந்தியன் ஆயில் கார்ப்ரேசனுக்கு இந்திய அரசு கொடுத்துவிட்டது. அவர்களுக்கு இங்கு ஏற்கனவே காவிரி டெல்டாவான நரிமணத்தில் சுத்திகரிப்பு நிலையம் 1993லிருந்து இயங்கிவருவதால் உடனடியாக அனுமதி கொடுத்தாகிவிட்டது.

அடுத்து இந்த வருடம் பிப்.2018இல் மேலும் 32 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க டெண்டர் விடப்பட்டது. அதில் பாரத் பெட்ரோலியம் 5இடங்களிலும், இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் 3இடங்களிலும் ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் 2இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க இந்திய அரசு ஓப்புதல் கொடுத்தாகிவிட்டது. http://www.financialexpress.com/…/oil-and-gas-disc…/1128819/

இதற்காக மேற்ச்சொன்ன நிறுவனங்கள் பல ஆயிரம் கோடியை முதலீடு செய்திருக்கின்றது. இப்போது பூமிக்கடியில் இருக்கும் ஹெட்ரோ கார்பனை எடுத்த பின் அதனை சுத்திகரிக்க வேண்டும். எனவே அதற்காக கடலூர் மற்றும் சிதம்பரம் சீர்காழி போன்ற பகுதிகளை பெட்ரோலிய மண்டலங்களாக அறிவித்திருக்கிறார்கள். இங்கு சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்க இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் நிறுவனத்தின் துணைநிறுவனமான சென்னை ஆயில் கார்ப்ரேசன் 27,000கோடியை முதலீடு செய்யவிருக்கிறது. https://www.thehindubusinessline.com/…/c…/article9830409.ece இங்கு சுத்திகரிக்கப்படும் எண்ணெயை வெளிநாடுகளுக்கோ அல்லது உள்நாட்டில் வேறு பகுதிக்கோ கொண்டுசெல்லவே சீர்காழியில் சாகர்மாலா திட்டத்தின் அடிப்படையில் புதிய துறைமுகம் வரவிருக்கிறது.

இப்படி காவிரி டெல்டாவை சுற்றி பல்வேறு நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி அளவில் முதலீடு செய்திருக்கிற சூழலில் காவிரி டெல்டாவில் நம் விவசாயிகள் விவசாயம் செய்து கொண்டிருந்தால் முதலாளிகளின் கனவில் மண் விழும் என்பதற்காகவே முதலாளிகளின் அடிமையான மோடி உச்சிகுடுமி நீதிமன்றமும் மூலமும் அரசு நிர்வாகத்தின் மூலமும் தமிழனின் உரிமையை மறுக்கிறது.

Leave a Reply