கார்ப்ரேட்களின் மோடியும் ஜ.பி.எல்லும்

கார்ப்ரேட்களின் மோடியும் ஜ.பி.எல்லும் 

கடந்த 2016-2017 நிதியாண்டில் மட்டும் பல்வேறு வகைகளில் பிஜேபிக்கு கிடைத்த நிதி என்பது 1034.27கோடி. இதில் பெரிய பெரிய கார்ப்ரேட் கம்பெனிகளிடமிருந்து பெறப்பட்டது மட்டும் 997.12கோடி. இது முந்தைய நிதியாண்டான 2015-16 இல் வெறும் 570.86கோடியே பிஜேபிக்கு கிடைத்தது. இதில் 463.41கோடி கார்ப்ரேட்களின் பணம். ஆனால் இந்த நிதியாண்டில் கார்ப்ரேட்கள் சுமார் 81.8%அளவுக்கு நிதியை பிஜேபி அள்ளி கொடுத்திருக்கின்றனர்.

இத்தனைக்கும் இந்த நிதியாண்டில் தான் கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பீஜேபியின் மோடி அரசு எடுத்தது. அது உண்மையிலேயே கார்ப்ரேட் முதலாளிகளிடம் இருக்கும் கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையென்றால் எப்படி எப்போதும் இல்லாதளவுக்கு கார்ப்ரேட் முதலாளிகள் பிஜேபிக்கு இவ்வளவு நிதிஅளித்தார்கள். இல்லையில்லை முதலாளிகள் பயந்துகொண்டு கொடுத்தார்களென்றால் இப்போது பிஜேபியிடம் இருப்பது முதலாளிகளின் கருப்பு பணமா?

இப்படி பெரிய பெரிய முதலாளிகளிடம் வாங்கிய பணத்தை கொண்டுதான் இவர்கள் தேர்தலையே சந்தித்திருக்கிறார்கள். பிஜேபி தனக்கு வந்த பணத்தில் 85.44%த்தை தேர்தலிலேயே செலவழித்திருக்கிறது. இதன்மூலமே தேர்தலில் தொடர்ந்து வெற்றியையும் பிஜேபி பெறுகிறது. ஆகவே தேர்தலை சந்திக்க இவர்களுக்கு பணம் வேண்டும். அதற்கு கார்ப்ரேட் முதலாளிகள் வேண்டும்.

என்வே தான் கார்ப்ரேட் முதலாளிகளுக்கு விசுவாசமாக இருக்க அவர்கள் கோடிகோடியாய் கொட்டியிருக்கும் ஐ.பி.எல்லை எப்பாடுப்பட்டாவது நடத்திவிடவேண்டுமென்று இந்திய அரசு நினைக்கிறது. அதற்கு இந்திய மோடி அரசுக்கு எடுபிடி வேலை பார்க்கும் தமிழக அரசும் துணை போகிறது. அதனால் தான் உரிமை சார்ந்து ஜனநாயக வழியில் போராடுகிறவர்களை கூட அதிரடிப்படை கொண்டு மிருகத்தனமாக தாக்குகிறது இந்த அரசுகள். இது அடிமைகள் தங்கள் எஜமானனுக்கு காட்டும் இராஜவிசுவாசம். இதனைதான் மோடியும் அவரின் எடுபுடியுமான எடப்பாடியும் செய்கிறார்கள்.
.
குறிப்பு:
பிஜேபிக்கு நிதியளித்தவர்களில் ஸ்டெர்லைட் எனும் அரக்க ஆலையை நடத்தும் வேதாந்த குழுமமும் இருக்கிறது.

Leave a Reply