காவிரி உரிமைக்காக கரூரில் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும், தமிழனின் தண்ணீரை தடுத்தும் துரோகம் இழைக்கும் இந்திய அரசினைக் கண்டித்து மே பதினேழு இயக்கம் சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் 04-04-2018 புதன் அன்று நடைபெற்றது.

தண்ணீரைத் தடுக்கிற இந்திய அரசுக்கு தமிழர்கள் ஏன் வரி கொடுக்க வேண்டும் என்று பதாகையினை தோழர்கள் பிடித்துக் கொண்டு முழக்கமிட்டனர். 177.25 டி.எம்.சியாக தமிழகத்தின் தண்ணீரை உச்ச நீதிமன்றம் குறைத்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் ஆதித்தமிழர் பேரவையின் தோழர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply