சென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்

கடந்த வாரம் பிப்.18ஆம் தேதி சென்னை அண்ணா அரங்கத்தில் வெல்லும் தமிழீழம் மாநாட்டில் 13 தீர்மானங்கள் அடங்கிய ’சென்னை பிரகடணத்தை’ மே 17 இயக்கம் வெளியிட்டது. ஏன் வெளியிட்டது தமிழீழம் வெல்லவேண்டுமென்பதற்காக மட்டுமா? என்றால் அதுவும் ஒரு காரணம் என்பதுதான். ஆனால் சென்னை பிரகடனம் வெளியிட்டதற்கு பரந்துபட்ட பல காரணங்கள் உண்டு. அதைதான் எங்கள் தோழர் திருமுருகன் பேசும்போது சொன்னார் ”எங்கள் லட்சியம் தமிழர் கடல் விடுதலை பெறவேண்டும்” என்பதே. தமிழர் கடலோடு தொடர்புடையது தான் இன்றைய சர்வதேச அரசியல் அது தமிழீழ விடுதலை என்பதாகட்டும் இல்லை சிரியாவில் தொடரும் இனப்படுகொலை என்பதாகட்டும், அண்டை நாடான மாலத்தீவில் நடக்கும் பிரச்சனையாகட்டும் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதுதான். உதாரணமாக

சமீபத்தில் இந்தியாவிற்கு அருகிலிருக்கும் மாலத்தீவில் நடக்கும் பிரச்சனை உலகம் அறிந்தது. தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் சீனாவின் நலனுக்கு ஆதரவாக இருப்பார் என்பதற்காக சீனா அவரையே தொடர்ந்து அதிபராக இருக்க வைக்க முனைகிறது. ஆனால் தனது நலனுக்கு எதிராக அப்துல்லா யாமீன் இருப்பார் அதனால் முன்னால் அதிபர் முகம்மது நசீத்தை மீண்டும் கொண்டுவர அமெரிக்க இந்திய கூட்டு முனைகிறது. இதில் அவரவர் நலன்கள் இருக்கிறதே ஒழிய மாலத்தீவின் மக்களுக்கு இந்த மேற்ச்சொன்ன நாடுகளால் தொடர்ந்து அச்சுறுதல் இருந்துகொண்டே தான் இருக்கீறது. இதே பிரச்சனை தான் தற்போது சிரியாவிலும் நடக்கிறது. இந்த பிரச்சனையின் உச்சகட்டம் தான் கடந்த பிப்.20 அன்று சீனா 12 இராணுவ கப்பல்களை நம் தமிழர் கடலில் (இந்திய பெருங்கடலில்) இறக்கிவிட்டிருக்கிறது.

ஏற்கனவே பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தனது இராணுவதளத்தை அங்கிருந்து இலங்கை அல்லது மலேசியாவில் கொண்டுவந்து நிறுத்த அமெரிக்கா முயன்று வருகிறது. இதுபோததற்கு இப்போது சீனா 12கப்பல்களை முதல் கட்டமாக இறக்கி விட்டிருக்கிறது. இதுபோன்ற சூழல் இந்த தெற்காசியாவில் வாழும் மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை வருங்காலங்களில் கொடுக்க இருக்கிறது.

இதையெல்லாம் கருத்தில்கொண்டு தான் சென்னை பிரகடணத்தில் ’’தமிழர் கடலில் இருந்து சர்வதேச நாடுகளே வெளியேறுங்கள்’’ என்று தீர்மானம் நிறைவேற்றினோம். அத்தோடு இந்திய ஒன்றியம் தங்களது அண்டை நாடுகளோடு ஏதேனும் ஓப்பந்தம் போட்டால் அந்தந்த எல்லையோர மாநிலங்களின் கருத்தினையும் கேட்டுக்கொண்டு தான் ஓப்பந்தங்கள் போடவேண்டுமென்று 13வது தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.

ஆகவே சென்னை பிரகடனம் என்பது தமிழினம் மட்டுமில்லை இந்த பிராந்தியத்திலிருக்கிற அனைத்து மக்களின் பாதுகாப்பு சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒரு பிரகடனம்.

http://www.thehindu.com/news/international/china-deploys-warships-in-indian-ocean/article22808463.ece

https://thediplomat.com/2018/02/whats-a-recent-chinese-naval-deployment-to-the-eastern-indian-ocean-about/

http://www.news.com.au/world/maldive-crisis-china-sends-a-naval-task-force-to-muscle-india-australia-out-of-power-game/news-story/a4e784c8ba330d3f70470a6c1b26828e

Leave a Reply