”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டிற்கு நன்கொடை

வணக்கம் தோழர்களே!

”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டினை பிப்ரவரி 18 அன்று சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஒன்றரை லட்சம் தமிழர்களின் இனப்படுகொலை என்பது 9 ஆண்டுகளில் மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. ஈழ இனப்படுகொலை குறித்த விவாதங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த மோசமான இனப்படுகொலையை இத்தனை சாதாரணமாக நாம் கடந்து விட முடியாது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழர்கள் நாம் எழுந்து நின்று குரல் கொடுத்தாக வேண்டும்.

இந்த மாநாட்டிற்கு நன்கொடை அளிக்க முன்வரவேண்டுமென தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம். வாய்ப்புள்ள தோழர்கள் நிதிப் பங்களிப்பு செய்யவும். கீழ்காணும் வங்கிக் கணக்கில் உங்கள் பங்களிப்பினை செலுத்தலாம்.

A/C Name: Nimir Publications
Bank: Karur Vysya Bank
Branch: Ashok Nagar
A/c no : 1278115000007792
A/C Type: Current
IFSC code : KVBL0001278

நன்கொடை அனுப்பிய பின், அனுப்பிய தொகை குறித்த விவரங்களை தவறாமல் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். 9884072010 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

பின்குறிப்பு: தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் மட்டுமே நிதிப் பங்களிப்பினைக் எதிர்பார்க்கிறோம். ஈழத் தமிழர்களிடம் நிதி உதவி பெறுவதை அறம் சார்ந்து மறுக்கிறோம். வெளிநாட்டு வங்கிக் கணக்குகளிலிருந்து நிதி உதவி பெறுவது என்பது இயலாது. வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழ்நாட்டுத் தோழர்கள் நிதிப் பங்களிப்பு செய்ய விரும்பினால், தமிழ்நாட்டில் உள்ள உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாக அனுப்பி வைக்கவும்.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply