மீனவர்களை காக்காத அரசுகளை கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

மீனவர்கள் உயிரைக் காக்காத இந்திய அரசினைக் கண்டித்தும், மீனவர் போராட்டத்திற்கு “மதச்சாயம்” பூசி கொச்சைப்படுத்தும் ௭ச்.ராஜா-பாஜகவினைக் கண்டித்தும் இன்று(12-12-2017) அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் பிரவீன் குமார் பங்கேற்றனர்.

பத்திரிக்கையாளர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரிக்கை குறிப்பு:

மே பதினேழு இயக்கத்தின் மீதும், குமரி மீனவர் போராட்டத்தின் மீதும் அவதூறு பரப்பும் பாஜக-எச்.ராஜாவிற்கு கண்டனம்

ஓகிப் புயலில் இந்திய அரசு திட்டமிட்டே புயலினை மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்காததால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் புயலிலே சிக்கினர். புயலுக்கு பிறகான மீட்பு நடவடிக்கைகளை திட்டமிட்டே செய்யாமல் தவிர்த்தது மோடியின் பாஜக அரசு. இதனால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயினர். குமரியின் கடலோர மீனவக் கிராமங்களிலிருந்து சென்ற மீனவர்களின் கதி என்னவானது என்பது இதுவரையில் உறுதி செய்யப்படாமல் தேடுதல் வேட்டை முழுமைப்பெறாமலும், முழுவீச்சில் நடக்காமலும் இருக்கிறது.

இந்தியாவின் பிற மாநிலங்களில் கடற்கரையில் தப்பிப் பிழைத்த மீனவர்களுக்கும் உரிய ஏற்பாடுகளை வசதிகளை செய்யாமல் இந்திய- பாஜக மோடி அரசு தவிர்த்து வருவதை மீனவர் வாக்குமூலங்கள் தெரிவிக்கின்றன. தூத்தூர், சின்னத்துறை உள்ளிட்ட கிராமங்களிலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் கிட்டதட்ட 1000 பேர் காணாமல் போயிருக்கின்றனர். ஆனால் கடற்படைக்கு இது குறித்து தற்போது உத்தரவு கொடுத்திருப்பதாக அமைச்சரின் செய்திகள் தெரிவிக்கின்றன என்பது அதிர்ச்சிக்குறியதாக இருக்கின்றன.

இம்மாதிரியாக செயல்படாது போன அரசினை கண்டித்து மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும் போராட்டம் நடத்துவதை பாஜகவின் தேசியத் தலைவர் திரு.எச்.ராஜா கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். இது வன்மையான கண்டனத்திற்குரியது. அங்கே பாதிக்கப்பட்ட மக்களை பாஜகவினர் கொச்சைப்படுத்துவதையும் சமூக வளைதளங்களில் காணமுடிகிறது. இந்நிலையில் மீனவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக அங்கே நடக்கும் போராட்டம் மதப் போராட்டமாக இருப்பதாக எச்.ராஜா பகிரங்கமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவிக்கிறார்.

இது ஒரு மதக்கலவரத்தை பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல் செய்ய திட்டமிடுவதை அம்பலப்படுத்தி இருக்கிறது. மீனவர்களை காக்காமல் தோல்வியுற்ற அரசு, அம்மக்களின் போராட்டங்களை மதம் சார்ந்த போராட்டமாகவும், மதப் போராகாவும் (It’s a religious war. We will face head-on) சித்தரிப்பது கீழ்த்தரமானது. பிற மத நம்பிக்கை சார்ந்தவர்களை மிகக் கொச்சையாகவும், கீழ்த்தரமாகவும் பேசுவதை காவல்துறையும், அரசும் எவ்வாறு அனுமதிக்கிறது என்கிற கேள்வி எழுகிறது.

இது போன்று இரு தரப்பிரன்ருக்கு இடையே வன்முறையை தூண்டும் விதமாக பேசிவரும் திரு.எச்.ராஜாவின் மீது ஏன் நடவடிக்கைகள்; எடுக்கப்படவில்லை என்பதை நாங்கள் கேள்வி எழுப்ப விரும்புகிறோம். இது போன்ற சமூகவிரோதிகளை கட்சியின் மிகமுக்கிய பொறுப்பில் வைத்திருக்கும் பாஜகவினருக்கும் எங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறோம்.

– மே பதினேழு இயக்கம்

9884972010

Leave a Reply