டிசம்பர் 6 இந்துத்துவ பயங்கரவாத கும்பலால் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு இந்திய ஒன்றியத்தின் மதச்சார்பின்மை கேள்விக்குள்ளாக்கப்பட்ட தினம்.

- in பரப்புரை

1992 ஆம் ஆண்டு இந்துத்துவ கும்பல் கூட்டம் கூட்டமாக சென்று பாபர் மசூதியின் மீது ஏறி அதனை உடைத்தனர். அது ராமர் பூமி என்று சொந்தம் கொண்டாடினர். ஆதாரமில்லா பழம் புராணத்தைக் கொண்டுவந்து அது தங்கள் நிலம் என்று வெறியாட்டம் போட்டனர்.

அதற்குப் பிறகு நாடு முழுதும் மிகப் பெரிய கல்வரத்தினை இசுலாமிய மக்கள் மீது RSS, VHP கும்பல் ஏவியது. இந்திய காங்கிரஸ் அரசும் இந்த கும்பலுக்கு துணையாக நின்று இசுலாமியர்களை ஒடுக்கியது. பாஜகவும், காங்கிரசும் வேறு வேறல்ல என்பதை மக்கள் உணர்ந்த தினம் இன்று.

இந்துத்துவ பயங்கரவாத பார்ப்பன கும்பல் இந்து, இந்து என்று சொல்லிக் கொண்டே அடித்தட்டு இந்து மக்களின் கழுத்தை நெறிக்கும். பார்ப்பனியமே இந்துத்துவம். அதில் நம்மைப் போன்ற சூத்திரர்களுக்கு இடமில்லை. அடித்தட்டு உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பறித்து பார்ப்பனர்களுக்கு கொடுக்க உருவாக்கப்பட்டதே இந்துத்துவ அரசியல்.

இந்துக்களாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் அடித்தட்டு மக்களின் கல்வி உரிமைக்கோ, மொழி உரிமைக்கோ, வேலை வாய்ப்பு உரிமைக்கோ, ஏன் வழிபாட்டு உரிமைக்கோ கூட இந்துத்துவ கும்பல் ஒருபோதும் குரல் கொடுக்கப்போவதில்லை. இதுவரையில் குரல் கொடுத்த வரலாறும் இல்லை.

இந்த பிரிவினைவாத, மக்கள் விரோத கும்பலை அடையாளம் கண்டு புறந்தள்ளுவோம். பாபர் மசூதி இசுலாமிய மக்களின் சொத்து.

இந்திய அரசே! பாபர் மசூதியை மீண்டும் கட்டிக் கொடு!
RSS, VHP, BJP-ன் சதியின் கீழாக வரலாற்றை திரிக்காதே!

தமிழர்களே! மக்கள் விரோத RSS, VHP, BJP கும்பல்களின் அமைப்புகளிலிருந்து வெளியேறுங்கள்.

இன்று ஆட்சிக் கட்டிலில் ஏறியிருக்கும் பார்ப்பனிய கும்பல் எப்போது வேண்டுமானாலும் இந்த மண்ணில் மதக் கலவரத்தை தூண்டிவிட்டு குளிர் காய காத்திருக்கிறது. அதனை முறியடிப்போம்.
இந்த நாளில் இந்துத்துவ-பார்ப்பனிய அரசியலை தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிக்க உறுதியேற்போம்.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply