’பணமதிப்பிழப்பு’ நடவடிக்கை என்ற பெயரில் மோடி மற்றும் அவரது சகாக்கள் அடித்த அந்தர் பல்டிகள்.

1.நவம்பர் 08.2016 அன்று இரவிலிருந்து கருப்பு பணத்தை ஒழிக்க, கள்ளநோட்டுகளை ஒழிக்க, ஊழலை ஒழிக்க நாட்டில் 86% புழக்கத்திலுள்ள 500 மற்றும் 1000 ரூபாயை நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார்.

2.அதே மோடி நவம்பர் 27.2016 அன்று பணமில்லா பரிவர்த்தனையை (cashless transaction) ஊக்குவிக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தேன் என்று அறிவித்தார்.

3.டிசம்பர் 07.2016 அன்று மோடியின் பொருளாதார செயலாளர் சக்திகாந்த தாஸ். இந்திய நாட்டிலுள்ள மக்கள் சேர்த்து வைத்திருக்கி பணத்தை வங்கிக்கு கொண்டு வந்து அதன்மூலம் அவர்களுக்கே திரும்பவும் குறைந்த வட்டிக்கு பணம் கொடுக்கவே இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டதென்று சொன்னார்.

4.டிசம்பர் 27’2016 அன்று தீவிரவாதிகளை நமது பணத்தை பயன்படுத்தி மிகப்பெரிய சதிவலையை பின்னினார்கள் அதை தடுக்கவே நான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தேன் என்று மோடி அறிவித்தார்.

5.டிசம்பர் 29’2016 அன்று அதே மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தேர்தல் சீர்திருந்தங்களோடு சம்பந்தப்பட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்படுமென்று போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்றார்.

6.ஜனவரி 11.2017 அன்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி வரி கட்டுபவர்களை அதிகரிக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தோமென்று அறிவித்தார்.

7.ஜனவரி 31,2017 அன்று மோடியின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் ரியல் எஸ்டேட் துறையில் விலையை கட்டுபடுத்தவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தோமென்று அவர் பங்குக்கு ஒன்றை சொன்னார்.

8.பிப்ரவரி 13,2017 அன்று மத்திய நிதியமைச்சர் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென்று வாய்கூசாமல் அடுத்த பொய்யை சொன்னார். பின்னர் வரி வரம்புக்குள் வராத நிழல் பொருளாதார அமைப்புக்குள் இருப்பவர்களை வங்கி நடைமுறைக்குள் கொண்டுவரவே இந்த நடவடிக்கை என்று உண்மையான காரணத்தை மெதுவாக சொன்னார்.

9.ஜீலையில் (Goods and Service tax) GSTஐ கொண்டுவரவே அதற்கு முன்னராக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டோமென்று அருண் ஜெட்லி ஓப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

10. ஆக்ஸ்ட் 30,2017இல் ரிசர்வ் வங்கி பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் செல்லாத என்று அறிவிக்கப்பட்ட 86% பணத்தில் 99% பணம் மீண்டும் அரசுக்கே வந்துவிட்டதென்று 1% மட்டுமே வரவில்லையென்று ஒரு புள்ளிவிபரத்தை வெளியிட்டு கறுப்பு பண ஒழிப்பு தீவிரவாத நடவடிக்கை தடுத்தல் என்ற பல பொய்களை சொல்லிக்கொண்டிருந்த மோடி மற்றும் அவரது சகாக்காளின் முகத்திரையை கிழித்தது.

இதுவே ’பணமதிப்பிழப்பு’ நடவடிக்கை என்ற பெயரில் மோடி கும்பல் அடித்த அந்தர் பல்டிகளில் சில. ஒவ்வொரு துறைவாரியாக இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எப்படி பெரும்பான்மையான இந்தியர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களென்று விரிவாக பார்ப்போம்.

Leave a Reply