தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநரிடம் மனு கையளிக்கப்பட்டது.

- in பரப்புரை

நெல்லை மாவட்டத்தில் வழக்கறிஞர் செம்மணிக்கு எதிரான காவல்துறை அத்துமீறல், சூழலியல் போராளி முகிலன் காவல்துறையினரால் கடத்தல், மயிலாடுதுறை பேராசிரியர் ஜெயராமன் மீது புது வழக்கு, கருத்துப் படம் வரைந்த பாலா கைது, மதுரை மாணவி நந்தினி அடுத்தடுத்து கைது என தமிழகத்தின் பல பகுதிகளில் சனநாயக உரிமைகள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் இன்று தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநரிடம் மனு 07-11-2017 செவ்வாய் அன்று கையளிக்கப்பட்டு வலியுறுத்தப்பட்டது.

தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவருமான தோழர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் தோழர் வன்னி அரசு, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் தோழர் ஜவாஹிருல்லா, SDPI கட்சியின் மாநிலத் தலைவர் தோழர் தெகலான் பாகவி, தமிழக மக்கள் முன்னணியின் தோழர் பொழிலன், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆகியோர் ஒன்றிணைந்து கூட்டமைப்பின் சார்பாக வலியுறுத்தினர்.

Leave a Reply