இந்தியாவை பார்ப்பன (காவி) தேசியமாக கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ் செய்யும் அட்டூழியங்கள்.

பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவை எப்படியாகினும் ஒன்றை தேசியமாக அதுவும் பார்ப்பன (காவி) தேசியமாக கட்டமைக்க வேண்டுமென்று கடந்த 70வருடங்களுக்கு மேலாக ஆர்.எஸ்,எஸ் அமைப்பு முயற்சித்து வருகிறது. அதற்கேற்றார் போல ஒரு சூழல் இப்போது மத்தியில் தனிப்பெரும்பாண்மையுடன் மோடி அரசு ஆட்சியில் இருப்பதால் முன்னைவிட தனது ஆட்டுழியங்களை மிகவேகமாக இந்தியா முழுமைக்கும் செய்ய ஆரம்பித்திருக்கிறது.

அதன்படி பள்ளியிலிருக்கும் சிறுவர்கள் மத்தியில் காவி பயங்கரவாதத்தை புகுத்த ஆர்.எஸ்.எஸ் இன் கல்வி பிரிவான ’வித்யா பாரதி அகில இந்திய கல்வி நிறுவனம்’ மூலம் அரசு கொடுக்கிற புத்தகங்களை தவிர ஆர்.எஸ்.எஸ் இன் கல்வி பிரிவு ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தனியாக புத்தகத்தை அச்சிட்டு வழங்கி வருகிறது.

அப்படி அவர்கள் கொடுக்கும் புத்தகத்தில்

1. இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களேதேஷ் போன்ற நாடுகளையும் சேர்த்து தனது அகண்ட பாரதம் என்ற கருத்தை திணிக்கிறது.

2.அயோத்தியில் காவி பயங்கரவாதிகளால் இடித்து தள்ளப்பட்ட மசூதி என்பது இராமர் கோயிலை இடித்து முஸ்லீம்களால் கட்டப்பட்டதென்றும் அதேபோல மதுராவிலிருக்கும் மசூதி என்பது கிருஷ்ணன் கோயிலை இடித்து முஸ்லீம் மன்னான அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதென்றும் ஒரு பொய்யான வரலாற்றை குழந்தைகள் மனதில் விதைக்கிறது.

3.விமானத்தை கண்டுபிடித்தவர்கள் யாரென்ற கேள்விக்கு ரைட் சகோதரர்கள் என்று பதில் இல்லாமல் ’பரத்வாஜ் மகரிஷி’ என்று பெயர் இருக்கிறது இவர் தான் இராமயணத்தில் ’புஷ்பக விமானம்’ இருந்ததென்று சொன்னவர் எனவே இவர் தான் விமானத்தை கண்டுபிடித்தவரென்று சிறுவர்களுக்கு சொல்லிகொடுக்க்ப்படுகிறது.

4.அதே போல கேரளமக்களால் கொண்டாடப்படும் ஓனம் பண்டிக்கையை வாமண ஜெயந்தி என்று பொய்யான வரலாற்றை போட்டிருக்கிறார்கள்.

5.இந்தியாவில் சிறந்தவர்கள் என்ற பட்டியல் போட்டு அதில் காந்திக்கு பக்கத்தில் அவரை கொலைசெய்த ஆர்.எஸ்.எஸ் இன் தாய் அமைப்பான இந்துமகா சபாவின் தலைவர்களான கோல்வார்க்கரையும் ஹெட்கேவர் படத்தையும் போட்டிருக்கிறார்கள். நேரு படம் அதில் இல்லை.

6.இந்தியாவின் சிறந்த மகன்களாக மனிதர்களை சாதிகளாக பிரித்த மனுஸ்மிருதியை எழுதிய மனுவையும் ஹானுமானையும் குறிக்கிறது.

இப்படி புத்தகம் முழுவதும் காவி பயங்கரவாத்த்தையும் சிறுபான்மையின மக்கள் மீதான வன்மைத்தை வளர்க்கும் வகையிலும் கருத்துகள் கொண்ட புத்தகத்தை திட்டமிட்டு இந்தியா முழுமைக்கும் 4முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 9புத்தகங்கள் 50ருபாய் என்ற அளவில் விநியோகித்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் எனும் பயங்கரவாத கும்பல்.

இந்த செயலை முதலில் கேரளாவில் தொடங்கியிருக்கிறார்கள் அங்கு பள்ளி ஆசியர்களே இதனை கடுமையாக எதிர்த்து போராட்டம் பண்ணியிருக்கிறார்கள். எனவே கேரள பள்ளி கல்வித்துறை இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டும் ஆர்.எஸ்.எஸ் இன் கல்வி பிரிவிடம் விளக்கம் கேட்டிருக்கிறது.

இது தொடக்கம் தான் இதை இந்தியா முழுக்க கொண்டு செல்ல இந்த பயங்கரவாத கும்பல்கள் திட்டமிட்டிருக்கிறது. எனவே இதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும். தேசிய இனங்களையும் அதன் மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் அழிக்க நினைக்கும் இந்த கும்பல்களிடம் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Leave a Reply