இவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது

ஆதார் மூலம் தனிமனித தகவலை சேகரிப்பது என்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானதென்று அரசியல் சாசன அமர்வு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இந்த மோடி அரசாங்கமோ அதை பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாமல் அரசின் அனைத்து சலுகைகளுக்கும் ஆதார் கார்டு அவசியமென்று அரசியல் சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது.

மோடி அரசின் இந்த எதேச்சியதிகாரத்தால் ஜார்கண்ட் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த விலை மதிப்பில்லாத நான்கு உயிர்களை நாம் இதுவரை இழந்திருக்கின்றோம். அதாவது ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குவத்ற்கு ஆதார் கட்டாயமென்று மத்திய அரசு சொன்னதின் அடிப்படையில் ரேசன் கார்டுடன் ஆதாரை இனைக்கவில்லை என்று சொல்லி 11லட்சம் ரேசன் கார்டுகளை ஜார்கண்டை ஆளும் பிஜேபி அரசு நிராகரித்திருக்கிறது. இதனால் 12 நாட்களுக்கு மேல் சாப்பிட உணவு இல்லாமல் பசியால்11 வயதே ஆன சந்தோஷி குமாரி என்ற சிறுமி கடந்த செப்28 அன்று இறந்திருக்கிறார் இல்லையில்லை அரசால் கொலை செய்யப்பட்டிருக்கிறாள். அதேபோலத்தான் கர்நாடகாவிலும் பசியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த முன்று பேர் இறந்திருக்கிறார்கள்.

ரேசன் கடைகளை நிரந்தரமாக மூட WTOவில் கையெழுத்து போட்ட மோடி கும்பல் அதை படிப்படியாக நிறைவேற்ற சட்டத்தையே மீறிவருகிறது. சாதாரண குடியானவர்கள் சட்டத்தை மீறினால் அதை தேசத்துரோகமென்று சொல்லும் இந்த கும்பல்களே இப்போது நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டு நான்கு பேரை கொலை செய்திருக்கிறதே இவர்களை யார் தண்டிப்பது.

Leave a Reply