மோடியின் ஒரே இந்தியா கோஷமும் வலுக்கும் எதிர்ப்பும்

ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்தும் மோடி எப்படியாகினும் பல்வேறு மொழி பேசக்கூடிய பல்வேறு கலச்சாரம் கொண்ட மக்கள் வாழும் இந்தியாவை ‘ஒரே இந்தியா’ என்ற மாற்றிவிடமென்று மெனக்கெட்டு கொண்டிருக்கிறார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் இன் இந்த முட்டாள்தனமான செயல் இந்தியாவிலுள்ள பல்வேறு தரப்பட்ட மக்களால் கடுமையான எதிர்ப்பை சந்தித்திக்கொண்டிருக்கிறது. உதாரணமாக

கேரளாவில் மலையாள மக்களின் கடவுளை ஆரியமயமாக்கும் விதமாக அமித்ஷா ஒரு கருத்தை சொன்னார். இதனால் வெகுண்டெழுந்த மலையாளிகள் திராவிட நாடு கோரிக்கையை எழுப்பி ஆர்.எஸ்.எஸ்க்கு பதிலடி கொடுத்தார்கள்.

அதுபோல கர்நாடகாவில் இந்துமதத்தை திணிக்க முயன்ற போது லிங்காயத்துகள் நாங்கள் இந்துகள் இல்லையென்று லட்சத்திற்க்கும் அதிகமானவர்கள் போரட்டத்தில் குதித்தனர்.

அதேபோல போன வாரம் ஒரே இந்தியா ஒரே கலாச்சாரம் என்ற பெயரில் ஒரு விழாவை மேற்கு வங்காளத்தில் நடத்த மோடி அரசு உத்தரவிட்ட போது வங்காளிகள் பெரும் போரட்டத்தை முன்னெடுத்தார்கள். இதனால் மேற்கு வங்க அரசு இந்த நிகழ்ச்சியை நடத்த மாநில அரசுக்கு விருப்பமில்லை என்று மோடி முகத்தில் கரியை பூசிவிட்டிருக்கிறது.

அதேபோல இரண்டு நாட்களுக்கு முன்னால் உ.பி யிலுள்ள ஆர்.எஸ்.எஸ் இன் அடிமை முதல்வர் யோகி ஆதித்யானந் திபாவளியை எல்லா பள்ளிகளிலும் கொண்டாட உத்தரவிட்ட போது அதற்கு அங்குள்ள ஆசிரியர் கூட்டமைப்பு கடுமையான எதிர்ப்பை கடந்த இரண்டு நாட்களாக மாநிலம் முழுவதும் செய்து வருகிறார்கள். குறிப்பாக அயோத்தியில் இரண்டு நாட்களாக இயல்பு வாழ்க்கை அடியோடு நின்றுவிட்டிருக்கிறது.

இப்படி இந்தியா முழுவதுமாக மோடி கும்பலின் ஒற்றை இந்தியாவிற்கு எதிராக எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதன் பிறகாவது மோடி கும்பல்கள் திருந்த வேண்டும். இல்லையென்றால் இருப்பதையும் இழக்க நேரிடும்.

Leave a Reply