தேர்தல் அரசியலும் கெஜ்ரிவாலின் புலம்பல்களும்

நான் பல ஆண்டுகளாக சொல்லிவருவது தான். ஊழல் தான் இந்தியாவின் எல்லா பிரச்சனைக்கும் காரணம். அதை ஒழித்து கட்டவேண்டுமென்றால் தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று முதல்வரானால் தான் முடியுமென்று முஷ்டியை உயர்த்திக்கொண்டு CNN ஆங்கில தொலைகாட்சிக்கு நான் ஏன் தேர்தல் பாதையை தேர்ந்தெடுத்தேன்று அன்று விளக்கம் சொன்ன கெஜ்ரிவால். இன்று ஊழல் ஒழிப்பில் எந்த இடத்தில் இருக்கிறாரென்றால் ஆரம்பித்த இடத்திலேயே ஒரு அங்குல கூட நகர முடியாமல் இருக்கிறார். என்ன காரணமென்றால் அவரை மத்திய அரசு வேலை செய்யவே விடமாட்டேங்குது.

ஆளுநர்ன்னு ஒருவரை நியமித்து மாநில அரசை வேலை செய்யவிடாமல் தடுத்து வருகிறது மத்திய அரசு. உதாரணமாக டெல்லியிலுள்ள 90% IAS அதிகாரிகள் தங்களது வேலையை சரிவர செய்ய மாட்டேங்கிறார்கள் இதனால் கோப்புகள் தேங்கி வேலைகள் எதுவும் துரிதமாக நடைபெற மாட்டெங்குது. இதனால் வேலைகள் நடைபெற லஞ்சம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. இதனை தடுக்க எண்ணி கலெக்டர்கள் மாநாடு போட்டேன். ஆனாலும் அவர்கள் வேலை செய்ய மறுக்கிறார்கள். மாநில அரசு சொல்லும் எதையும் செய்யக்கூடாதென்று ஆளுநர் மூலம் வாய்மொழி உத்தரவு போடப்பட்டிருக்கிறது.

சரி இவர்களை போல் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாமென்றால் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் சொன்னால் அவர்களும் வேலை செய்ய மறுக்கிறார்கள்.சரிவர வேலை செய்யாதவர்களை பணி இடமாற்றம் மாநில அரசு செய்தால் ஆளுநர் அவர்களை மீண்டும் அதே இடத்தில் அமர்த்திவிடுகிறார். இப்படி மத்திய அரசு அளவுக்கு மீறி மாநில அரசை ஆட்டிப்படைக்கிறது.

இதனால் தேர்தலின் போது நான் கொடுத்த வாக்குறுதிகளை கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை என்று வெளிப்படையாக தனது ஆதங்கத்தை இன்று நடத்த அரசு விழாவில் கெஜ்ரிவால் கொட்டி தீர்த்து விட்டார். இதுதான் இந்தியாவில் தேர்தல் அரசியலின் நிலை. கெஜ்ரிவால் தேர்தல் அரசியல் எனும் புதைகுழியில் சிக்கினால் என்னவாகும் என்பதற்கு சமகால படிப்பினை.

Leave a Reply