மாநிலங்களை ஆட்டி படைக்கும் மத்திய அரசு

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி மாநிலங்களுக்கு கங்காணி வேலை பார்க்கும் அதிகாரம் தான் இருக்கிறதென்று அன்று தொட்டு இன்றுவரை பலரும் பேசிவருகிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் செவிமடுக்காத மத்திய அரசு மேலும் மேலும் அதிகாரத்தை மத்தியிலேயே குவித்து வருகிறது. அதுபோக தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவ்வப்போது மாநில அரசையே ஆட்டி படைக்கிறது.

உதாரணமாக கடந்த வாரம் டெல்லியில் மெட்ரோ ரயில் கட்டணத்தை மாநிலத்தில் ஆட்சியிலிருக்கிற ஆம் ஆத்மி கட்சியின் கெஜ்ரிவால் அவரிடம் கலந்தலோசிக்காமல் மத்திய அரசின் உத்தரவின் பேரில் மாநில ஆளுநரே உயர்த்திருக்கிறார்.  http://www.hindustantimes.com/…/story-PfNnhtjWL2fWvmKIszayk… டெல்லி மெட்ரோ இரயில் கார்ப்ரேசன் (DMRC) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு முறையே 50:50 பங்குகள் கொண்டது.அப்படியிருக்கும் போது மாநில அரசிடம் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசே உயர்த்துவதென்பது மாநில அரசுகளை ஒன்றுமில்லாத அரசாக மாற்றும் வேலையே. இந்தியாவில் தேர்தலில் நின்று வெற்றிபெற்று ஊழலை ஒழிப்பேன் அதை கிழிப்பேன்று சொன்னவர் தன்னால் எங்கள் மாநிலத்திலுள்ள ஒரு போலிஸ் அதிகாரியை கூட மாற்ற உரிமையில்லையே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். தற்போது கூட மத்திய அரசு உயர்த்திய கட்டணத்தை குறைக்கச்சொல்லி மாநில அரசே மெட்ரோ நிலையத்திற்குள் தர்ணா போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறது. பார்க்க படம் 01 http://www.asianage.com/…/its-futile-for-aap-to-protest-del…

அதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன் இனிவாரும் எல்லா காலங்களிலும் சுத்ந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மத்திய அரசு சொல்லும் விதங்களில் தான் மாநில அரசுகள் விழாவை கொண்டாட வேண்டுமென்று உத்தரவு போட்டிருக்கிறது. அதோடு நேற்று மத்திய அரசு மாநிலங்களெல்லாம் ‘Ek Bharat Shreshtha Bharat’ ஒரே இந்தியா சிறந்த இந்தியா’ என்ற விழாவை நடத்த வெண்டுமென்று உத்தரவு போட்டிருக்கிறது.

பல்வேறு காலச்சாரங்கள் கொண்ட, பல்வேறு மொழி பேசக்கூடிய, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில் இந்த கலாச்சாரத்தை தான் நீ பின்பற்ற வேண்டும். இந்த மொழியை தான் நீ பேச வேண்டுமென்று தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒன்றிய அரசு மாநிலங்கள் மீது திணித்து வருகிறது. இது தெரிந்தும் ஒன்றிய அரசுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத நிலையில் மாநில அரசுகள் பல்பிடுங்கப்பட்ட பாம்பாக வலம் வருகிறது.

இதே நிலை நீடித்தால் 1947இல் உருவாக்கப்பட்ட இந்தியா என்ற ஒரு நாடு கூடிய விரைவில் பல்வேறு நாடுகளாக மாறிபோகும் அதை செய்து முடிப்பதற்காகவே ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலில் இயங்கும் மோடி அரசு ஓயாமல் வேலை செய்து வருகிறது.

Leave a Reply