அமெரிக்காவின் புதிய தெற்காசிய கொள்கை இந்தியாவில் பாதுகாப்பின்மையை உருவாக்கும் ஏன்?

“4R’s+S” இதுதான் அமெரிக்கா தெற்காசியாவில் கடைபிடிக்கப்போகும் புதிய கொள்கைகள். அதென்ன “4R’s+S” – regionalise, (பிராந்தியமயமாக்கல்) realign (மறு உருவாக்கம் ), reinforce (வலுப்படுத்துதல்), reconcile (சமரசம் செய்தல்) and sustain (தக்கவைத்தல்).

”ஆப்கானிஸ்தான் -பாகிஸ்தானை’’ மையப்படுத்தி தெற்காசியாவுக்கான தனது கொள்கைகளை இப்படி வடிவமைத்திருக்கிறது அமெரிக்கா. இதில் regionalise ’பிராந்தியமயமாக்கலுக்கு’ இந்தியாவை பயன்படுத்துகிறது அமெரிக்கா அதற்கு இந்தியாவும் ஓப்புக்கொண்டுள்ளது. கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி அமெரிக்கா இராணுவ அமைச்சர் இந்தியாவுக்கு வந்த போது இது இறுதி செய்யப்பட்டு விட்டது.
realign (மறு உருவாக்கத்திற்கு அமெரிக்கா தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்புகிறது. reinforce வலுப்படுத்துவதற்கு 3000 இராணுவ வீரர்களை கூடுதலாக அனுப்புகிறது. ஏற்கனவே 12,000அமெரிக்க இராணுவம் அங்கிருக்கிறது. மேலும் NATO படைகளை கூடுதலாக அனுப்பவும் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இதுபோக கடல்வளத்தை காக்க கப்பல்களும் 159 ஹெலிகாப்டர்களும் அமெரிக்கா கொடுத்து ஆப்கானிஸ்தானில் அமைதியை தக்கவைக்க போகிறதாம். இருக்கிறது.

இவ்வளவும் எதற்கென்றால் மத்திய ஆசிய நாடுகளிலுள்ள இயற்கை வளங்கள் – குறிப்பாக எண்ணெய், எரிவாயுகளை கொள்ளையடிக்க. அதாவது வளைகுடாவுக்கும் மேற்கு சைபீரியாவுக்கும் அடுத்தபடியாக மிக அதிகமான எண்ணெய் வளம் இருப்பது, கஜகஸ்தானிலும் துருக்மேனிஸ்தானிலும், அஜர்பைஜானிலும் தான். மேற்ச்சொன்ன மத்திய ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் 6.6 டிரில்லியன் (66 இலட்சம் கோடி) கன மீட்டர் எரிவாயு நிலத்துக்கடியில் இருக்கிறது. இதை ஐரோப்பாவுக்கோ, அமெரிக்காவுக்கோ கொண்டு செல்வதாயின் அதற்கான எரிவாயுக் குழாய்கள் ரஷ்யாவினூடாகவோ அல்லது ஈரானினுடாகவோ தான் செல்ல முடியும்.
ஈரானைத் தனிமைப்படுத்துவது சவூதி அரேபியா மற்றும் இஸ் ரேலின் கோரிக்கை. இதையே அமெரிக்கா செய்கிறது. எனவே, ஈரானின் ஊடாக எரிவாய்க் குழாய்கள் கொண்டு போக சாத்தியமில்லை. ரஷ்யா பற்றி சொல்லத்தேவையில்லை அதுவும் சாத்தியமில்லாத போது மாற்றாக வழியொன்று தேவைப்பட்டது.

இவ்வாறு, சிக்கலுக்குரிய பல நாடுகளுக்கும் காஸ்பியன் கடலுக்கும் குறுக்கே எண்ணெய்க் குழாய் அமைப்பதை விட, தூரம் குறைந்த, பாதிச் செலவு மட்டுமே ஆகக்கூடிய பாதை ’’ஆப்கான் – பாகிஸ்தான் – அரேபியக்கடல்’’ எனும் குழாய்ப் பாதை முன்மொழியப்பட்டது. இப்பாதை மூலம், அரேபியக் கடலிலிருந்து இந்தியாவையும் பிற ஆசிய நாடுகளையும், வளைகுடாவையும் ஐரோப்பாவையும் எளிதாகச் சென்றடைய முடியும்.

எனவே தான் ஆப்கானிஸ்தானை மையப்படுத்தி தெற்காசியாவுக்கான தனது புதிய அரசியல் கொள்கையை அமெரிக்கா செயல்படுத்தப்போகிறது. இப்படி தெற்காசியாவில் அதுவும் இந்தியாவுக்கு மிக அருகிலிருக்கும் ஒரு நாட்டில் போர் சூழல் உருவாகும் பட்சத்தில் அதுவும் அதற்கு இந்தியா உதவும் பட்சத்தில் இந்தியாவிலும் அதன் தாக்கம் எதிரொலிக்குமா இல்லையா? வரும் காலங்களில் எண்ணெய் வளச்சண்டையில் தெற்காசியாவிலுள்ள மக்கள் ஆடுகளை போல பலியாக்கப்பட போகிறார்கள் என்பது மட்டும் உறுதி.

Leave a Reply