குண்டர் சட்டத்திலிருந்து சிறை மீண்ட தோழர்களுக்கு தமிழக மக்கள் முன்னணி சார்பில் நடைபெற்ற வரவேற்புக் கூட்டம்.

மக்களுக்காக போராடியதற்காக குண்டர் சட்டம் ஏவப்பட்டு சிறை மீண்டு வந்த மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன், அக்கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் வளர்மதி ஆகியோருக்கு வரவேற்புக் கூட்டம் தமிழக மக்கள் முன்னணி சார்பில் கடந்த 7-10-2017 அன்று பாவலரேறு தமிழ்க்களத்தில் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தினை தமிழக மக்கள் முன்னணியின் தோழர் பொழிலன், வழக்கறிஞர் தோழர் பாவேந்தன். வழக்கறிஞர் தோழர் அங்கயற்கண்ணி, தோழர் திருமலை ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

தோழர்கள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். இந்த கூட்டத்தில் பல்வேறு தமிழ்த்தேசிய மற்றும் முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply