கேரளாவில் காவிகும்பல்கள் செய்யும் அட்டூழியங்கள்

நாடெங்கும் கொலை கொள்ளை என்று செய்து திரியும் காவிகும்பல்கள் கேரளாவில் ஒற்றுமையை வலியுறுத்தி யாத்திரை போகிறோம் என்ற பெயரில் வன்முறையை விதைக்கும் பேரணியை நடத்தி வருகிறார்கள். எப்படியாவது வட இந்தியாவை போல் தென்னிந்தியா முழுவதும் காவியை படர விட்டுவிடவேண்டுமென்று துடிக்கிறார்கள். அதற்கேற்றார் போல தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் அவர்களின் அடிமைகள் தான் ஆட்சியில் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் கிட்டதட்ட தனது கொள்கைகளை பரப்ப முடிகிறது. அடுத்து கர்நாடகா அங்கு காங்கிரஸ் தான் ஆட்சியில் இருக்கிறதென்றாலும் அங்கு ஏற்கனவே பிஜேபி ஆட்சியில் இருந்திருக்கிறது. ஆனால் கேரளாவில் நிலைமை வேறு அங்கு இதுவரை இந்த காவிகும்பல்களின் வேலைகள் எடுபடவே இல்லை. பிஜேபியும் அங்கு இதுவரை பெரிதளவில் வளரவில்லை.

ஆனால் கடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களிலும் 1987க்கு பிறகு இரண்டு இலக்க ஓட்டு சதவீதத்தை வாங்கியிருக்கிறார்கள்.பார்க்க படம்02. இதனால் மகிழ்ச்சி அடைந்திருக்கிற சங்பரிவார கும்பல்கள் இதனை மேலும் அதிகரிக்க கேரளாவில் மததுவேசத்தையும் வன்முறையையும் கட்டவிழுந்துவிட முயன்று வருகிறார்கள்.

உதாரணமாக அகிலா அசோகன்(பார்க்க படம் 3) என்ற இந்து பெண் முஸ்லீம் மதத்திற்கு மாறி ஜாஹான் என்ற பையனை கடந்த 2016இல் திருமணம் செய்திருக்கிறார். இதுபோல திருமணங்கள் கேரளாவில் இயல்பாக நடக்கும் ஒன்று. ஆனால் இந்த பிரச்சனையில் ஆர்.எஸ்.எஸ் உள்ளெ நுழைந்து பெண்ணின் அப்பாவை மிரட்டி தனது பெண்ணை ’லவ் ஜிகாத்’ என்ற அடிப்படையில் வலுகட்டாயமாக இஸ்லாமிய மதத்துக்கு மாற்றி அவரை சிரியாவுக்கு நாடுகடத்தி திவிரவாதியாக மாற்ற போகிறார்களென்று ஆதாரமில்லாமல் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து கேரளா நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தனர். இதனை சரிவர விசாரிக்காத நீதிபதி இவர்கள் திருமணம் செல்லாது என்று தடாலடியாக அறிவித்துவிட்டார். இதனை எதிர்த்து இவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினார்கள்.

அங்கு நீதிபதி விசித்திரமான ஒரு தீர்வை சொன்னார். அதாவது ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியைக்கொண்டு (ரவீந்திரன்) விசாரணை நடத்த வேண்டுமென்று. இதனை எதிர்த்து இராண்டாவது மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.இப்போது ஏற்கனவே இருந்த கெஹருக்கு பதிலாக தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டிருந்தார். இவர் பல முக்கியமான கேள்வியை கேரளா நீதிமன்றத்தை நோக்கி கேட்டிருந்தார்.

அதில் இந்துத்துவ வாதிகள் பயன்படுத்தும் மோசமான சொல்லான ’லவ் ஜிகாத்’ என்பதை நீதிமன்றம் எப்படி சொல்லமுடியும். அந்த பெண் மேஜரா இல்லையா என்பது குறித்து கேரள நீதிமன்றம் ஏன் கணக்கில் எடுக்கவில்லை. முக்கியமான ஒன்றான சிரியாவுக்கு கொண்டு போய் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கப்போகிறார்களென்று சொல்லி தான் திருமணத்தை தடைசெய்திருக்கிறீர்கள். அதற்கான எந்த ஆதாரத்தையும் ஏன் காட்டவில்லையென்று அடுக்கடுக்கான கேள்வியை கேட்டு இந்துத்துவாதிகளின் நோக்கத்தை கேள்வி கேட்டிருக்கிறார்.

இயல்பாக நடக்கும் திருமணத்தையே எவ்வளவு கொடுரமாக மாற்றி அதன் மூலம் மலிவான அரசியல் செய்ய்யும் இந்த காவிக்கும்பல்கள் தான் எங்களுக்கு பாதுகாப்பிலையென்று இப்போது யாத்திரை போய்க்கொண்டிருக்கிறார்கள். இதைவிட கொடுமை ஏதாவது இருக்க முடியுமா?

Leave a Reply