தேர்தல் அரசியல் இயக்க அரசியல் ஒரு பார்வை – பாகம் 5

கடந்த பாகத்தில் உள்நாட்டில் மத்திய அரசு கொண்டு வரும் எந்தவித மக்கள் விரோத மசோதாவையும் மாநிலஅரசால் எப்படி தடுக்க முடியாதென்று பார்த்தோம். அதேபோல மத்திய அரசு வெளிநாடுகளுடனும், வெளிநாட்டு நிறுவன்ங்ளுடனும், வெளிநாட்டு அமைப்புகளுடனும் போடும் ஓப்பந்தங்கள் இந்தியாவிலுள்ள சுயதொழில் செய்பவர்கள், இந்தியாவின் தற்சார்பு மற்றும் ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் அதையும் மாநில அரசுகளால் தடுக்க முடியாது. எப்படி?

இந்திய அரசியலமைப்பு தெளிவாக ஒரு விசயத்தை வரையறுத்திருக்கிறது.அதாவது மாநில அரசு தனது தேவைகளுக்காக வெளிநாடுகளுடனோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுடனோ எந்த உடன்படிக்கையும் செய்யமுடியாது என்பது தான் அது. உங்களுக்கு இப்போது ஒரு சந்தேகம் வரலாம் அப்படியென்றால் தமிழகத்தில் ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர்திட்டம், கூவம் சீரமைப்பு போன்ற திட்டங்களில் வெளிநாடு நிறுவனங்கள் தானே பங்கெடுத்தது அது எப்படி சாத்தியமானதென்றால். அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 253இல் ‘OTHERWISE’ என்ற ஒரு வாக்கியமிருக்கிறது அதை பயன்படுத்தி ’மத்திய அரசு சம்மதித்தால்’ என்று சேர்த்து மாநில அரசுகள் மத்திய அரசிடம் அனுமதி பெற்று நிறைவேற்றிக்கொள்ளலாம். மத்திய அரசுக்கு மாநில அரசு இணைங்கி போகவில்லையென்றால் அனுமதி மறுத்துவிடும்.

அதேபோல மத்திய அரசு வெளிநாடுகளுடன் போடும் ஓப்பந்தங்களை அது எந்த மாநில மக்களை பாதித்தாலும் மாநில அரசுகள் கட்டாயம் அதை நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். அதுகுறித்து
அரசியலமைப்பு சட்டம் பிரிவு 253இல்

“வெளிநாடுகளுடன் மத்திய அரசு செய்துகொள்ளும் ஓப்பந்தங்களை நிறைவேற்ற நாடாளுமன்றம் மாநில பட்டியலில் கைவக்கலாம்.” இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லமுடியும் இரண்டு உதாரணங்களை மட்டும் பார்ப்போம்.

1.அதாவது இந்தியா என்ற ஒரு நாடு உருவாவதற்கு முன்பே 1892இல் பி.சி.ராய் என்ற விஞ்ஞானியால் மருத்து பொருட்கள், சோப்பு, அறுவைசிகிச்சை கருவிகள் உள்பட பல்வேறு முக்கியமான நாட்டு மக்களுக்கு தேவையான கருவிகளையும் அதறகு தேவையான இயந்திரங்களையும் உற்பத்தி செய்து வந்தது வங்களா வேதியியல் நிறுவனம். 1950இல் இந்தியாவிற்கு வருகை தந்த சோவியத் குழு இந்த நிறுவனத்தை வெகுவாக பாராட்டியது. ஆனால் 1977இல் இந்த நிறுவனம் நஷ்டமடைந்து அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது அப்படிப்பட்ட நிறுவனம் இந்தியாவில் இருந்தது என்பதற்கான சுவடுகூட இல்லாமல் போய்விட்டது.. ஏனென்றால் இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து கடைபிடித்துவரும் மோசமான பொருளாதார கொள்கைகளே இதற்கு காரணம். அதாவது 1947ற்கு பிறகு இந்தியா செய்துகொண்ட ஓப்பந்ததால் இங்கு தொழில் தொடங்கிய பி.பைசர் என்ற வெளிநாட்டு பெருமுதலாளி நிறுவனத்திற்கு ஏகப்பட்ட சலுகைகளை இந்திய அரசு கொடுத்தது. அதேநேரத்தில் உள்நாட்டு தொழில்கள் மீது ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தது இதன் விளைவு வெளிநாட்டு நிறுவனம் வளர்ந்தது. வெளிநாட்டு நிறுவங்களோடு போட்டி போட முடியாமல் உள்நாட்டு நிறுவனம் மூடப்பட்டது. இன்று நாம் வாங்கும் அனைத்து பொருட்களும் Made in என்று வேறு நாட்டின் பெயரை தாங்கிவருகிறதென்றால் அரசின் அயோக்கியத்தனம் தான் அதற்கு முதன்மை காரணம்.

2. 2014இல் பிரதமராக மோடி பதவியேற்றவுடன் வெளிநாட்டு அமைப்பான உலக பொது வர்த்தக கழகத்துடன்(WTO) செய்துகொண்ட ஒப்பந்தம் தான் ரேசன் கடைகளை மூடும் ஓப்பந்தம். இந்த ஒப்பந்ததின் மூலம் இந்திய நாட்டிலுள்ள 75% மக்கள் நம்பியிருக்கிற ரேசன்கடைகளை இந்த அரசு மூடப்போகிறது. இவ்வளவு மக்களை பாதிக்கும் இந்ததிட்டத்தை எல்லா மாநிலங்களும் சேர்ந்து நிறுத்தமுடியுமாஎன்றால் முடியாது. இதை சமீபத்தில் நாம் தமிழ்நாட்டிலே உணர்ந்தோம். டிவி வைத்திருப்பவர்களுக்கு ரேசன் பொருள்கிடையாது, கிரைன்டர் வைத்திருப்பவர்களுக்கு கிடையாதென்று மெல்ல மெல்ல இந்ததிட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள்.

ஆக இதுபோல நிறைய உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி எந்தவொரு மக்களை பாதிக்கும் ஓப்பந்தைகளையும் எந்த நாட்டுடனும் மத்திய அரசு போடலாம். அதை மாநில அரசுகள் நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். இதுதான் மாநிலங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரம்.

Leave a Reply