மோடி அரசின் தமிழர் விரோத போக்கு

சென்னை தரமணியிலுள்ள செம்மொழி தமிழாய்வு மன்றத்திற்கு மத்திய மனித வளமேம்பாட்டு மையம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதாவது கடந்த ஆண்டு ( 2016-17) கொடுத்த நிதியில் பாதியை தான் இந்தாண்டு (2017-18) ஓதுக்கியிருக்கிறது.

செம்மொழி தமிழாய்வு மன்றம் தமிழ் மொழியின் தொன்மை குறித்து ஆராயவும்,தமிழரின் பழம்பெரும் நூல்களை பாதுகாப்பு, தமிழ் மொழியை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்வது உள்ளிட்ட முக்கிய திட்டங்களை அடிப்படையாகக்கொண்டு தொடங்கப்பட்டது. குறிப்பாக இந்த மன்றத்தின் சார்பாக உலக பொதுமறையாம் திருக்குறளை 22 இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்து பரப்பியது. இப்படிப்பட்ட முக்கியமான தமிழத்துறை மோடி அரசு அழிக்கும் நோக்கத்தோடு அதன் நிதியை பாதிக்கும் மேல் குறைத்துவிட்டது.

ஆண்டுவாரியாக ஓதுக்கிய நிதி கீழே:

2013-14 =9கோடி
2014-15 =8கோடி
2015-16=11.99கோடி
2016-17=5கோடி
2017-18=3கோடி

ஏற்கனவே இலங்கையில் சிங்களவனோடு சேர்ந்து தமிழனை கொல்கிறது.இங்கே தமிழ்நாட்டில் இந்தியை சமஸ்கிருதத்தை திணித்து தமிழ் மொழியை அழிக்கிறது.அதுபோக ஜல்லிகட்டு போன்ற தமிழரின் கலாச்சாரத்தை அழிக்கிறது. இது போதக்குறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு தமிழரின் தொன்மையை உலகு பறைச்சாற்றும் ’கீழடி’ அகழ்வாய்வை இழுத்து மூட அனைத்து வேலைகளை செயத இந்த தமிழர் விரோத மோடி அரசு.

தற்போது செம்மொழி தமிழாய்வு மன்றத்தையும் இழுத்து மூட வேலை பார்க்கிறது. இதன் முதற்கட்டம் தான் செம்மொழி தமிழாய்வு மன்றத்தை திருவாரூர் மத்திய பல்கழைகழகத்தோடு இணைக்கும் முயற்சியை எடுத்தார்கள். இப்போது நிதியை குறைத்து அடுத்த வேலையை செய்யப்பார்க்கிறார்கள். இதனை தமிழின உணர்வாளர்கள் அனுமதிக்கூடாது. இல்லையென்றால் சொந்த நாட்டிலேயே நம் மொழி அழிக்கப்பட்டு நாம் அநாதைகளாக ஆக்கப்படுவோம்.

ஆதாரங்கள்:

  1. http://timesofindia.indiatimes.com/city/chennai/centre-cuts-fund-for-tamil-institute-by-50-in-1year/articleshow/60835039.cms?utm_source=facebook.com&utm_medium=social&utm_campaign=TOIDesktop
  2. http://www.newindianexpress.com/cities/chennai/2017/jul/07/move-to-merge-central-institute-of-classical-tamil-with-tiruvarur-central-varsity–1625264.html

Leave a Reply