ஏழை குழந்தைகளின் சுகாதாரத்தில் கைவைக்கும் மோடி அரசின் துரோகம்

ஏழை குழந்தைகளின் சுகாதாரத்தில் கைவைக்கும் மோடி அரசின் துரோகம்:

மோடி அரசு பதவியேற்றதிலிருந்தே ரேசன் கடைகளை மூடும் ஓப்பந்தத்தில் கையெழுத்து போட்டதாகட்டும், அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு கொடுப்பதாகட்டுமென்று தொடர்ந்து ஏழை மக்கள் பயனடைந்து வரும் ஓவ்வொரு திட்டத்தையும் முடக்கும் வேலையை செய்து வருகிறது. அதில் அடுத்த வேலைதான் அங்கன்வாடிகளில் ஏழை கர்பிணி பெண்களுக்கு வழங்கிவரும் ஊட்டசத்து உணவுக்கு பதிலாக பணத்தை கொடுப்பது. அதாவது

ஏழை தாய்மார்கள் மகப்பேறு காலத்தில் சத்தாண உணவு உட்கொண்டால் மட்டுமே பிறக்கிற குழந்தை எந்தவித குறைபாடுமில்லாமல் பிறக்குமென்பதற்காக
’ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை’ என்ற திட்டத்தின் அடிப்படையில் அங்கன்வாடி வழியாக கர்பினியாக இருக்கும் ஏழை தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவை 45மாதங்களுக்கு மத்திய அரசு இதுவரையில் வழங்கி வந்தது. அதை தற்போது நிதியோக் அமைப்பின் அறிவுரையின் பேரில் நிறுத்திவிட்டு உணவுக்கு பதிலாக பணமாக தரப்போகிறோமென்று அரசு சொல்கிறது.

அதாவது இந்தியாவில் 0-18வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் 43கோடிபேர், அதிலும் குழந்தைகள் பெண்கள் இவர்கள் இருவரும் சேர்த்தால் மொத்த மக்கள் தொகையில் 72% இருக்கிறார்கள். அவர்களின் ஓட்டுமொத்த சுகாதரத்தையுமே மோடியின் இந்த திட்டம் கேள்விக்குள்ளாக்குகிறது.எப்படி?
ஊட்டசத்து குறைபாடோடு ஒரு குழந்தை பிறக்கக்கூடாது என்பதற்காகத்தான் 45மாதங்களுக்கு அவர்களுக்கு ஊட்டசத்துள்ள உணவை அரசு வழங்குகிறது. அதன்படி அரசு தனி ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு 45மாதங்களுக்கு 7125ரூபாய் ஓதுக்குகிறது. மாதத்திற்கு என்று எடுத்துக்கொண்டால் 158ரூபாய்.

இப்போது இந்த 158ரூபாயை நாங்கள் நேரடியாக உங்களுக்கு உங்கள் வங்கிகளிலேயே போடுகிறோமென்று சொன்னால். ஊட்டசத்துள்ள உணவு 158ரூபாயில் ஒரு மாததிற்கு கிடைக்குமா? அரசு 158ரூபாய் ஓதுக்குகிறதென்றால் அவர்கள் உணவை மொத்தமாக வாங்கும் போது விலை குறைவாக இருக்கும் எனவே 158ரூபாய் என்பது கட்டுபடியாகும். அதேவிலையில் நீ வெளிமார்க்கெட்டில் வாங்கிக்கொள் என்றால் முடியுமா? நீங்களே சிந்தித்து பாருங்கள். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்..

இதே வேலையை தான் இவர்கள் ரேசன் கடை மூடப்போவதற்கும் சொன்னார்கள். நாங்கள் ரேசன் கடையை மூடிவிட்டு அந்த பொருளுக்கு ஆகும் விலையை உங்கள் வங்கிகளிலேயே செலுத்தி விடுவோம். நீங்கள் வெளிமார்க்கெட்டில் அதை காசு கொடுத்து வாங்கிக்கொள்ளலாமென்று. சர்க்கரை ரேசனில் உதாரணமாக 1கிலோ 22ரூபாயென்றால் வெளிமார்க்கெட்டில் 52ரூபாயாக இருக்கும். அரசு 22ரூபாய் தரும் மீதமிருக்கிற 30ரூபாய் யார் தருவார்கள். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இதைதான் இவர்கள் எல்லா திட்டத்திலும் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.

’ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியாக மனிதனை கடித்த கதை’ என்று பழமொழிக்கு ஏற்ப தற்போது குழந்தைகளின் சுகாதாரத்தில் கைவைக்க மோடி அரசு முயல்கிறது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

-மே பதினேழு இயக்கம்
9884072010

தரவுகள் :

http://niti.gov.in/writereaddata/files/document_publication/Nutrition_Strategy_Booklet.pdf

https://thewire.in/178910/women-infants-cash-transfer/

https://thewire.in/179894/maneka-gandhi-niti-aayog-cash-transfers/

Leave a Reply