வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு – தந்தை பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம்.

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு – தந்தை பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம்.

இரண்டாயிரம் வருட பார்ப்பனிய ஆதிக்கத்தை தகர்த்தெறிந்த தந்தை பெரியாரின் திராவிட கருத்தியல் பகுத்தறிவை வளர்த்து சுயமரியாதைமிக்க தமிழர்களாக நம்மை தலைநிமிரச் செய்தது. இப்படிப்பட்ட தமிழினத்தை வஞ்சிக்கும் பொருட்டு தமிழர் விரோத ஆரியப் பார்ப்பன பாஜகவின் மோடி அரசும், அதன் எடுபிடியான எடப்பாடி அரசும் தந்தை பெரியார் காலம் முழுவதும் எதிர்த்த இந்தி மொழி, இந்துத்துவா கருத்தியலை திணித்து தமிழகத்தை பார்ப்பனியத்திற்கு அடிமையாக்க முயற்சிக்கிறது. தற்போது காவிகளின் பிடியில் சிக்குண்டுள்ள தமிழகத்தை இருண்ட காலத்திற்கு தள்ளும் முனைப்போடு செயல்படும் அரசை அம்பலப்படுத்த, மே 17 இயக்கம் தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 16ம் தேதி, சனியன்று சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. தோழர்களும், பொதுமக்களும் குடும்பத்தோடு கலந்துகொள்ள அழைக்கிறோம்.

நாள்: செப்டம்பர் 16, சனி மாலை 5 மணி
இடம்: எம்.ஜி.ஆர்.நகர் மார்கெட் (KK நகர்), சென்னை.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply