அரசு தலைமை வழக்கறிஞர் விடுப்பு எடுத்ததால் மீண்டும் வாய்தா வாங்கிய அரசு

- in பரப்புரை

அரசு தலைமை வழக்கறிஞர் விடுப்பு எடுத்ததால் மீண்டும் வாய்தா வாங்கிய அரசு

தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண் குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததிற்கு எதிரான வழக்கு இன்று (11-09-2017) சென்னை உயர்நீதிமன்றத்தில் வருவதாக இருந்தது. இந்நிலையில் இந்த வழங்கில் அரசு தரப்பில் ஆஜராகி வாதாடி வரும் அட்வகேட் ஜெனரல் எனப்படும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் இன்றும் நாளையும் (11 மற்றும் 12 செப்டம்பர்) விடுப்பு எடுத்துள்ள காரணத்தினால், வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைக்குமாறு அரசு தரப்பில் கோரப்பட்டது. இதனால் இந்த குண்டர் சட்ட வழக்கில் அரசு மீண்டும் வாய்தா பெற்றுள்ளது. எனவே வழக்கு மீண்டும் புதன்கிழமை (13-09-2017) எடுத்துக்கொள்ளப்படும். ஏற்கனவே பல்வேறு காரணங்களால் அரசு தரப்பில் பலமுறை வாய்தா வாங்கப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி விடுப்பு எடுத்த காரணத்தினாலும், தற்போது அரசு தலைமை வழக்கறிஞர் விடுப்பு எடுத்த காரணத்தினாலும், 4 தோழர்களின் விடுதலை தள்ளிபோடப்பட்டு வருகிறது.

Leave a Reply