இந்திய அரசு அம்பலப்பட்டு நிற்கிறது என்பதை தான் விவசாயிகளின் நிர்வாண போராட்டம் உணர்த்துகிறது

விவசாயிகள் சாலையில் 28 நாட்களாக போராடி வருகிறார்கள் அவர்களை சந்திப்பதற்கு பிரதமர் தயாராக இல்லை. விவசாயம் குறித்தான உறுதிமொழிகளை கொள்கை அளவிலே அவர் வெளிப்படுத்த தயாராக இல்லை. பாராளுமன்றத்தில் இது குறித்து வெளிப்படையாக விவாதிக்க தயாராக இல்லை. ஆக ஜனநாயகம் இல்லாத ஒரு அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

[fbvideo link=”https://www.facebook.com/mayseventeenmovement/videos/1659438440740275/” width=”500″ height=”400″ onlyvideo=”0″]

மறுபுறத்திலே விவசாயிகளுக்கான மானியத்தை நிறுத்துவதும் விவசாய விளைபொருட்களுக்கான கொள்முதலை நிறுத்துவதும் விவசாய பொருட்களை பாதுகாக்கும் தானிய கிடங்குகளை மூடுவதற்கும் ஒப்பந்தங்களை மோடி அரசு போட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக விவசாயத்தை அழிக்கக்கூடிய ஒப்பந்தங்களை தொடர்ச்சியாக போட்டுவர கூடிய மோடி அரசாங்கம் இன்னொருபுறத்திலே விவசாயிகளின் அடிப்படை கோரிக்கையை காது கொடுத்து கேட்பதற்கோ அதை நடைமுறைப்படுத்துவதற்கோ அதை விவாதிப்பதற்கோ தயாராக இல்லை. ஒரு ஜனநாயக அரசென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டும். மக்களை சந்திக்க முடியாத பிரதமர் அல்லது இது குறித்து விவாதிக்க முடியாத பிரதமர் எப்படி மக்கள் பிரதிநிதியாக இருக்கின்றார் என்ற கேள்வியை இந்த போராட்டம் இப்போது எழுப்பி இருக்கின்றது.

ஒரு ஜனநாயக ரீதியான கோரிக்கையை நீங்கள் பரிசீலிக்க தயாராக இல்லை ஆனால் முக்கியமற்ற ஒரு திரைப்பட உலகத்தையோ மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளுடைய முதலாளிகளையோ அல்லது பன்னாட்டு கம்பெனிகளின் முதலாளிகளையோ சந்திப்பதற்கு பிரதமர் தயாராக இருக்கிறார் . நேரம் ஒதுக்குகிறார் என்றால் இந்தியாவின் பிரதமர் கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனை பாதுகாப்பதற்காக பிரதமராக இருக்கிறார். இது மக்கள் விரோதமான செயலாக இருக்கிறது. அதை தமிழக விவசாயிகள் இங்கே அம்பலப்படுத்தி வருகிறார்கள். ஒட்டுமொத்த தமிழகமும் விவசாயிகள் பின்னே திரள வேண்டும். அனைத்து இடங்களிலும் இதற்கான போராட்டங்களை நாம் துவக்க வேண்டும் என்பது தான் விவசாயிகளை பாதுகாப்பதற்கு அடிப்படை வேலையாக இருக்க முடியும். ஆகவே இப்படிப்பட்ட ஒரு மோசமான ஒரு அரசை வைத்திருக்கக்கூடிய நாம் இந்த அரசை கேள்விக்குள்ளாக்கக்கூடிய போராட்டங்களை, ஏனென்றால் இவை அனைத்து மக்களிடம் இருந்து பெறப்பட்ட வரிகள். மக்களிடம் இருந்து பெற்ற வரிகளை மக்களுக்கு கஷ்ட காலங்களில் தருவதற்கு இந்திய அரசு தயாராக இல்லை என்றால் அது கார்ப்பரேட்டுகளுக்கு கடன்களை கொடுக்கிறது. கார்ப்பரேட்டுகள் திரும்பி தரமாட்டார்கள் என்று தெரிந்தும் கூட அவர்களுக்கு கடனை கொடுத்துக்கொண்டு இருக்கின்றது. 11 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட்களிடம் இருந்து பணம் வரவில்லை. அதை தள்ளுபடி செய்திருக்க கூடிய இந்திய அரசு நம்மிடம் வாங்கிய வரி பணத்தை கார்ப்பரேட்டுகளுக்கு கொடுப்பதும் விவசாயிகளிடம் இருந்து பறிப்பதுமான வேலைகளை செய்து வருகிறார்கள்.

ஆகவே இது கடுமையான கண்டனத்துக்குரியது. இது மக்கள் விரோதமானது. மோடி அரசை நாம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க கூடிய அளவிலான மிகப்பெரும் ஒரு மக்கள் எழுச்சி நாம் நடத்த வேண்டி இருக்கின்றது.

Leave a Reply