தமிழர் தேசியத் தொழிலாளர் முன்னணி சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

தமிழர் வாழ்வுரிமையான வேலை உரிமையைப் பறிக்கும், தமிழ்த் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ஆவடி, ஓ.சி.எப். நிர்வாகத்தைக் கண்டித்து,
09-07-2016 அன்று காலை ஆவடியில், தமிழர் தேசியத் தொழிலாளர் முன்னணி சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர். மே பதினேழு இயக்கத் தோழர்களும் இதில் கலந்து கொண்டனர். தமிழர் நலக் கழகம் என்ற ஒன்றை உருவாக்கி, தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வுகளை நடத்தியதற்காகவும், அது குறித்த பிரச்சாரங்களை செய்ததற்காகவும் அமுதன் என்பவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும் தோழர்கள் பேசினர். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் அருள்முருகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

Leave a Reply