குர்து இனம் தங்கள் நிலத்தினை தன்னாட்சி பிரதேசமாக அறிவித்துகிறது.

குர்து போராளிகள் சிரியாவிற்குட்பட்ட நிலப்பரப்பினை விடுவித்து அதை தன்னாட்சி பிரதேசமாக அறிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வாழ்த்துகளை தெரிவிக்கிறது.

ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பாக குர்திஸ்தான் இருக்கிறது. ஒவ்வொரு நாடுகளாலும் தொடர்ந்து ஒடுக்குமுறைக்குள்ளாக்கபட்ட குர்துகள் தங்களது விடுதலைப்போராட்டத்தினை துவக்கினார்கள். இந்த அடிப்படையில் குர்து தொழிலாளர் முன்னனி எனும் முற்போக்கு அமைப்பு பிரிந்து நின்றிருந்த குர்து மக்களை ஒன்றிணைத்து போராட்டத்தினை வலுப்படுத்தினார்கள்.

ஆப்கானியர்கள், மங்கோலியர்கள், பாரசீகர், அரேபியர் என்று பலராலும் ஆக்கிரமிக்கப்பட்ட குர்து மக்கள் பல்வேறு இனக்கலப்பிற்காளானார்கள். சக குர்து மனிதனை நம்பிவிடமுடியாது என்று நம்பிக்கையற்ற தன்மையில் இருந்த குர்து மக்களை தேசிய இனமாக முற்போக்கு அரசியலின் அடிப்படையில் வலுவான ராணுவமாக கட்டி எழுப்பினார்கள்.

சதாம் உசேனால் பல்லாயிர குர்து கொலைசெய்யப்பட்டனர். சதாமின் எதிரியான ஈரானினாலும் பலர் கொலை செய்யப்பட்டனர். அமெரிக்க கைக்கூலி துருக்கி அரசாலும் குர்துகள் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சிரியாவும் இவர்களை ஒடுக்கியது.
ஒடுக்குமுறைக்கு எதிராக அனைத்து குர்துகளையும் ஒன்றிணைத்தார்கள். அவர்கள் இயக்க அரசியலை வலுவாக கட்டி எழுப்பினார்கள். தேர்தல் அரசியலாக சிதைந்து போகாமல் விடுதலைப் போராட்டத்தினை வலுபடுத்தி போரிட்டார்கள்.

முதலில் சதாம் வீழ்ந்த போது , ஈராக்கில் இருந்த தங்களது பகுதியை விடுவித்தார்கள். தற்போது சிரியா போரின் போது அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ், துருக்கி ஆகியப்படைகளுக்கு எதிராக போரிட்டு தங்களது பகுதியை மீட்டெடுத்து தன்னாட்சி பிரதேசத்தினை அறிவித்திருக்கிறார்கள்.

குர்து மக்களை பிளவுபடுத்தக்கூடிய பல்வேறு காரணிகள் இருந்த போதிலும் முற்போக்கு அரசியலின் அடிப்படையில் இணைத்து போராட்டத்தினை கட்டி எழுப்பியது நம் அனைவருக்குமான பாடம்.
குர்து போராட்டத்தின் தலைவர் துருக்கியால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் குர்து விடுதலைப் போராட்டம் சிறைப்படவில்லை.
கோரிக்கையை மையப்படுத்தி வலுவாக முன்னகர்கிறது. 2009இல் ஈழப்படுகொலை போர் முடிந்தவுடன் குர்து போராளிகள் வெளியிட்ட ஈழ ஆதரவு கடிதம் வலிமை மிக்கது. வரலாற்று சிறப்பு மிக்கது.

கருணாவின் துரோகத்தினை குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்தது அக்கடிதம். கருணாவை கொண்டாடிய இங்கிருக்கும் போலி மனித உரிமை, போலி-தலித்திய அறிவாளிகளின் முகத்தில் காறிதுப்பிய கடிதமாகவே அதை பார்க்க முடியும். ஒரு விடுதலைப் போராளிகளின் களநிலையை மற்றொரு விடுதலை இயக்கமே அறியமுடியும்.
அதே போல குர்தி போராளிகள் அமெரிக்காவினால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டவர்கள். குர்து அரசியல் செயல்பாட்டாளர்களை பிரான்சில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்தார்கள். ஐரோப்பிய நாடுகளும் அவர்களுக்கு துணை நிற்கவில்லை.

இந்நிலையில் தங்களது விடுதலைப் போராட்டத்தினை மேற்குலகிடம் அடகு வைக்காமால் இளம் குர்துகள் தங்களது விடுதலைக்கான பயணத்தில் முக்கிய மைல் கல்லை அடைந்திருக்கிறார்கள்.
குர்து விடுதலைப் போராட்டத்தில் அப்போராளிகள் தங்களது மக்களை வந்தேறி என்றோ, கலப்பினத்தவன் என்றோ,வேறு தேசத்தவன் என்றோ பிரித்து போராட்டத்தினை வலுக்குறையச் செய்யவில்லை. குர்து தேசியத்தோடு அனைத்து ஏழை, உழைப்பாளிகளை இணைத்து போராட்டத்தினை வலுப்படுத்தினார்கள். குர்துகள் பல்வேறு கலப்பிற்குட்பட்டாலும் தேசிய இனமாக குர்துகளாக எழுந்து நின்று தங்களது உரிமையை வென்றிருக்கிறார்கள்.

குர்து போராளிகளுக்கு வாழ்த்துகளை மே17 இயக்கம் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தில் பதிவு செய்கிறது.

 

The May17 Movement congratulates the Kurdish Rebels who have freed and declared autonomy of the section of their homeland that was hitherto under the control of Syria.

The landmass of Kurdistan had been under the control of the nations Syria , Turkey, Iran and Iraq. In each of these nations the Kurds had faced oppression and they started their freedom struggle. As a result the Kuridstan Workers Party a progressive organization united the Kurds who were distributed across many nations and strengthened the struggle.

The Krudish landmass was occupied by people of many Ethnic groups like Mangols, Afgans, Parsis and Arabs. As a result the Kurds mixed with these Ethnic groups. Distrust for a fellow Kurd was rife in their society. Under these circumstances guided by a progressive political movement the Kurds organized themselves into a strong military force.

Kurds were systematically executed under the reign of SadamHussain. Even in his rival state, Iran the Kurds were targeted and killed. Turkey which has been a puppet of America also killed the Kurds. The Kurds faced oppression in Syria also.
After the fall of SadamHussain the Kurds liberated their land from Iraq. Now in the ongoing Syria War they fought against the forces of Al-Queda, ISIS and Turkey and have liberated their homeland and have declared it an autonomous state.

There were various factors on the ground that could have stood in the way of the unity of Kurdish People. But in spite of that the Kurds were able to stand together based a progressive ideological politics. This is a lesson to all of us.

Even after the Turkish government arrested and jailed the leader of Kurdish freedom movement they were not able to imprison their freedom movement. The freedom movement continues unfettered. Their struggled centered on the demand for an Independent Kurdistan stands strong.

At the end of the genocidal war in Eelam in 2009 the Kurdish rebels wrote a historically important strong letter in support and solidarity with the Eelam .

The letter mentioned the betrayal of Karuna. The letter was a spat on the face of all the pseudo human rights and pseudo Dalit intellectuals in Tamil Nadu who hailed Karuna. Only a Freedom movement can understand the realities about another freedom movement.

The Kurdish rebels were also banned in America as a terrorist organization. Europe too did not support their movement. Kurds who were politically associated with the Krudish freedom movement were killed in France two years back.

The Kurdish rebels did not surrender their struggle and demands in the feet of the western imperialism. Rather the young Kurdish rebels march strongly on the path to freedom and have reached an important milestone.

The Kurdish rebels did not segregate the Kurds as pure Kurds, outsiders, mixed race and another nationality. It would have lessened their strength. Rather it united all the poor and oppressed working class people and built a strong freedom movement. Even after the Kurds mixed with people of other ethnic groups the stood together as one Nationality, the Kurds and have won their rights.

In this historically important moment May 17 movement congratulates the Kurdish rebels.

Leave a Reply