திருப்பூரில் 27-நவம்பர்-2015 அன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஒருகிணைத்து நடத்திய மாவீரர் நாள் நிகழ்வு.
பறை முழக்கம் நிகழ்த்தியும், மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியும் நிகழ்வு துவங்கியது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் தோழர் கு.ராமகிருஷ்ணன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
நிகழ்வில் திரளான தோழர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி தமிழீழ விடுதலைக்கு உறுதியேற்றுக் கொண்டனர்.