இரு மடங்காக ஏறும் மின்கட்டணத்தை தடுப்போம்!

- in பரப்புரை

இரு மடங்காக ஏறும் மின்கட்டணத்தை தடுப்போம்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை மின்சாரம் கொடுப்பதற்காக நம்மைச் சுரண்டப் போகும் மின் உயர்வைத் தடுப்போம்!! 
வீடுகள், சிறு வணிகதொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மின் கட்டணத்தை அடுத்த மாதம் முதல் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகக் கூட்ட அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 20 வருடங்களில் அரசுக்கு சொந்தமாக புதிய மின் நிலையங்களை உருவாக்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு உற்பத்தி சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டது. மின்சார உற்பத்தி தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது. தனியார் மின் நிலையங்களில் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப் பட்டது. நம் மின்சாரத்துறை கடுமையான நட்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது.
விரிவாகச் சொல்வதானால்1994-95 இல் தமிழக அரசின் உற்பத்தி, மொத்த தமிழகத் தேவையில் 65%ஆக இருந்தது. மத்திய அரசு தொகுப்பிலிருந்து மீதமுள்ள 34.5% பெறப்பட்டது. தனியாரிடம் இருந்து வெறும் 0.5% மின்சாரம் வாங்கப்பட்டது. இந்த காலங்களில் வருவாய் மின்சார வாரியத்திற்கு அதிகமாகவும், உபரியாகவும் இருந்த்து. இதைக் கொண்டு புதிய மின் உற்பத்தி திட்டங்களை கொண்டு வர இயன்றது. மேலும் விவசாயம், குடிசைகள், நலிவடைந்த தொழில்களுக்கு சலுகையாக அளிக்கவும் முடிந்தது. 1994ஆம் ஆண்டுக்கு பின்னர், அந்த சமயத்தில் மத்தியில் இருந்த காங்கிரஸின் மன்மோகன்சிங், மாண்டெக் சிங்கின் புதிய பொருளாதாரக் கொள்கையால் தமிழ்நாடு மின்சார வாரியம்( அனைத்து மாநிலங்களுக்கும் இதே கதிதான்) சுயமாக மின் உற்பத்திச் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. மாறாக தனியாரிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இதன் அடிப்படையில் 1994இல் 3858 கோடி ரூபாய் இலாபம் ஈட்டிய மின்சாரவாரியம் 2001இல் ரூ4851 கோடி நட்டத்தை சந்தித்தது. மேலும் மின்சாரத்தேவை 1994 இல்(29075 மில்லியன்  யூனிட்) இருந்ததைப் விட 2007இல் தேவை 100% (66,815 மில்லியன் யூனிட்) உயர்ந்தது (இருமடங்காகியது). மாநில அரசு சுயமாக மின் உற்பத்திச் செய்யப்படுவதை தடுத்த மத்திய அரசு, தான் பங்களிக்கும் மின்சாரத்தை வெறும் 50% மட்டுமே உயர்த்தியது. 1994இல் வெறும் 0.5% மின்சாரம்(122 மில்லியன் யூனிட்) உற்பத்திச் செய்த தனியார் நிறுவனங்கள், 2007இல் 50%ஆக  ( 23,924 மில்லியன் யூனிட்) மின் உற்பத்தியை செய்ய ஆரம்பித்தது.
 இதன் மூலம்  மாநில மின்சார வாரியம் தனியார் உற்பத்தியை சார்ந்து நிற்க மறைமுகமாக கட்டாயப்படுத்தியது. மேலும் மத்திய அரசு தனது கடமையை கைகழுவி, மின்பகிர்மானம்உற்பத்திக் கட்டுப்பாட்டை தன் கையில் கொண்டு வந்தது.அதாவது மாநில அரசு தனது இறையாண்மையை இழந்ததுஇதனடிப்படையிலேயே நாம் கூடன்குளம்கல்பாக்கம் அணு மின் உற்பத்தியையும் பார்க்க முடியும். இது மத்திய அரசின் உற்பத்தி திட்டம். இதன் மூலம் மத்திய அரசு மேற்குலக நாடுகளுக்கு ஒப்பந்தமிட்டு தனியாரை ஊக்குவிக்கிறது. மேலும் அணு ஒப்பந்ததில் பெரும் பணத்தை இலஞ்சமாக பெறவும் வழிவகை செய்கிறது. ஆனால் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்திற்கோ, அதன் மக்களுக்கோ அளிக்கப்பட போவதில்லை. இது தனியார் நிறுவன்ங்களுக்கும், பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படப்போகிறது.
இந்த மக்கள் விரோத தனியார்மின்வாரிய ஒப்பந்தங்களை நடைமுறைபடுத்த உயர் நீதிமன்றத்தின் வழியாக மக்களோ, ஆர்வலர்களோ, இயக்கங்களோ தலையிடாமல் இருக்க மின்சாரத்திற்கென ஒரு நீதிமன்றம் பாணியிலான (பஞ்சாயத்து) ஒரு மன்றம்ஒழுங்குமுறை ஆணையம்என்கிற பெயரில், புதிதாக இயற்றப்பட்டமின்சார ஒழுங்கு சட்டம்இயற்றப்பட்ட்து. இவை அனைத்தும் தனியாரிடம் உற்பத்தியை அளிப்பதும், மாநில அரசுகள் மின் உற்பத்தியை செய்வதை தடுத்து மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை தனியாரின் நலனுக்க்கு ஏற்ப அளிக்கச் செய்வதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. உலகமயமாக்கலை இந்தியாவில் நடைமுறைக்கு கொண்டு வந்த காங்கிரஸ்மன்மோகன் மேற்குலக அரசின் திட்டத்தின் படி இதை செய்தார்கள். இதன் மூலம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் மின் உற்பத்தியும், மின்சார கொள்முதல் விலை நிர்ணயமும் இருக்காமல் வழிவகை செய்தது மத்திய அரசு. இதனால் மா நில அரசுகள் சலுகை விலையில் மின்சாரம் விவசாயம்குடிசை போன்றவர்களுக்கு அளிப்பதை தடுக்க இயலும்.
மேல்சொன்ன அனைத்து நட்டத்தையும் சாத்தியப்படுத்துவதற்காக வேலை செய்ய வழி வகுத்தது மின்சார ஒழுங்குமுறை ஆணையம். இந்த ஆணையம் தனியாருக்கும்மின்சார வாரியத்திற்கும் உண்டான வழக்குகளில் தனியார் நிறுவன்ங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு பெரும் தொகையை பெறுவதற்கு ஏதுவாக தீர்ப்பளித்ததுஇதன் மூலம் வருட்த்தில் 330 நாட்களும் இயங்காமல் செயல்பட்ட தனியார் நிறுவன்ங்கள் கூட ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் பணத்தை மின்சார வாரியத்திடமிருந்து பெற முடிந்தது. தனியார் காற்றாலைகளுக்கு ஏதுவாக வருடந்தோரும் 600 கோடி ரூபாய் நட்ட்த்தை மின்சார வாரியத்திற்கு உருவாக்கியது இந்த ஒழுங்குமுறை வாரியம். சாஃப்டுவேர் நிறுவனங்கள் கேட்காத போதும் கூட, இந்த நிறுவனங்களுக்கு கட்டணச் சலுகையும் அறிவித்தது. இதை விட உச்சகட்டமாக 189 கோடி ரூபாய் கேட்டு மின்சார வாரியத்தின் மீது வழக்கு தொடர்ந்த  பி.பி.என் என்கிற நிற்வனத்திற்கு கிட்ட்தட்ட 1050கோடி ரூபாய் நட்ட ஈட்டை வழங்கச் சொல்லி உத்திரவிட்ட்து இந்த ஆணையம். இவ்வாறு இதுவரை கிட்ட்தட்ட 53,298 கோடி ரூபாய் நட்டத்தை உருவாக்கி இருக்கிறது.  .
முன்னர் இதே போல தனியார் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு கம்பெனிகளுக்கும், சாஃப்டுவேர் நிறுவனங்களுக்கும்  சலுகை விலையில் மற்றும் முன்பிருந்த விலையிலிருந்து குறைத்து மின்சாரத்தைக் கொடுத்த காரணத்தால் நம் மின்சாரத்துறைக்குக் கடுமையான கடன்சுமை ஏற்படுத்தப் பட்டது.
பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு மின்சார விலையில் அளித்த சலுகையின் காரணமாகக் கிட்டதட்ட ரூ.50 ஆயிரத்து 512 கோடியை நம் மின்சார வாரியம் இழந்துள்ளது. அந்த இழப்பினைப் பொதுமக்களான நம்மிடம் இருந்து வசூலிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. முதல் தவணையாக ரூ.9741 கோடி ரூபாயை வசூலிக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதன் படி நமது மின்சார கட்டணம் இரண்டு மடங்காக உயரப்போகிறது.  
மின்வாரியத்தின் மொத்த இழப்பீட்டில் வெறும் ரூ.9741 கோடி ரூபாயை வசூலிக்கவே நம் மின் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தப் போகிறார்கள். மீதமுள்ள ரூ.40771ஆயிரம் கோடியை வரும் ஐந்து ஆண்டுகளில் வசூலிக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். அப்போது, அடுத்து வரும் ஆண்டுகளில் நம் மின் கட்டணம் எத்தனை மடங்கு அதிகரிக்கப் போகிறது என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இவ்வளவுக்கும் காரணம் யார்
மத்திய அரசின் தனியார் மயக் கொள்கையை 1990ஆம் ஆண்டுகளில் கொண்டு வந்த காங்கிரஸ்மன்மோகன் கூட்டனியும், மத்திய அரசால் உருவாக்கப்பட்ட  மின்சார ஒழுங்குமுறை வாரியத்தின் (மின்சார வாரியத்திற்கான நீதிமன்றம்) நடவடிக்கையே இதற்குக் காரணமாகும். தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தமக்கு மின் உற்பத்தியில் நட்டம் ஏற்பட்டுள்ளது  என்று கேட்கும் போதெல்லாம் அந்தத் தொகையையும், சில சமயங்களில் அதற்குக் கூடுதலான தொகையையும் மின்சார ஒழுங்குமுறை வாரியம் நம் மின்சாரத் துறையிடமிருந்து வாங்கிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கை பெரும்பாலான நமது நலனுக்குப் புறம்பாகவே அமைந்துள்ளது. நம்மைக் கடன் சுமையில் ஆழ்த்தும் செயலையே அது செய்திருக்கிறது. அதோடு நிற்காமல், பன்னாட்டு நிறுவங்களுக்குப் போதுமான மின்சாரம் அளிப்பதாலும், மிகச்சலுகை விலையில் தடையில்லா மின்சாரம் வழங்குவதாலும் ஏற்படும் நட்டம் அனைத்தையும் நம்மிடமிருந்து வசூலிக்கும் செயலிலும் அது ஈடுபட்டு வருகிறது. வேறு எவருக்காகவோ சலுகை அளிக்க வேண்டி நம்மிடம் பணம் வசூலித்தது போதாதென்று, அவர்களுக்காகத் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதற்காக நம் உடைமையையும், உயிரையும், நிலத்தையும், சந்ததிகளையும் அழிக்க வல்ல கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணு மின் நிலையங்கள் போன்ற மின் நிலையங்களை அமைப்பதற்கும் இந்த வாரியமும், அதனை அமைத்த மத்திய அரசும் முழு முயற்சி செய்து வருகின்றன.
2010 ஆண்டில் மென்பொருள் நிறுவனங்களுக்கு (சாஃப்டுவேர் நிறுவனங்கள்) யூனிட் ஒன்றுக்கு 2.50 ரூபாய் சலுகையை இந்த வாரியம் அளித்தது. இவ்வாறு குறிப்பிட்ட சில துறைகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சலுகைகைகள வாரி வழங்கி வழங்கியே நம் மாநிலத்தின் மின்சாரத்துறையை அது மீழாக் கடனில் தள்ளியுள்ளது. உலகமயமாக்கல், தனியார்மயம், தொழில் துறையில் 10% வளர்ச்சி என்று பேசி பேசியே இன்று பிறரின் சுமையை இந்த வாரியம் நம் தலையில் ஏற்றி வைத்துள்ளது.
இந்த வாரியத்தை அமைத்த மத்திய அரசோ, கூடங்குளம்,கல்பாக்கம் அணு மின் நிலையங்களை நம் தலைமுறையை அவை அழிக்கும் என்று தெரிந்தே தனியாருக்கு மின்சாரம் வழங்க வேண்டுமென்பதற்காக நம் மீது திணிக்கின்றது. அணுமின்சார உற்பத்தி விலை அதிகமானது. அதனை சரி செய்ய வேண்டுமென்றால்  இந்தக் கட்டண உயர்வு செய்யப்பட்டேயாக வேண்டும். இது கற்றறிந்தோரின் அறிவுரை. அவர்களின் அறிவுரை நியாயமானது, உண்மையானது.
இதையெல்லாம் எதிர்த்து நாம் விளக்கங்களையும், கேள்விகளையும் கேட்க வேண்டாமா?
அடுத்த சில மாதங்களிலேயே வீடுகள், சிறு கடைகள், சிறு வணிகங்கள், தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயரவிருக்கிறது.  இதன் மூலம் நமது வருமானம் சுரண்டப்டுவதும் நமது தொழில் முடங்குவதும், விலைவாசி ஏறுவதும் நடக்கும். மேலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மின்சாரம் சலுகை விலையில் அளித்து அவர்களின் உற்பத்தியை அதிகரித்து நமது தொழிலை முடக்கப் போகிறார்கள். மின்சார கட்டணத்தைக்  கட்ட இயலாமல் ஏழைகள் மின் தொடர்பை துண்டிக்கும் நிலை வெகு விரைவில் வர உள்ளது. இதன் காரணமாக அவர்கள் குழந்தைகளின் கல்வியும் பாழ்படப் போகும் சூழ்நிலை உருவகியுள்ளது.
தற்போழுது ஹுண்டாய் மோட்டர், போர்டு, நோக்கியா போன்ற வெளி நாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதற்காக நம்மிடம் மின்சாரத் தடையை அமல் படுத்தி வருகிறார்கள். இனிவரும் காலங்களில், மின்சாரக் கட்டணம் பயங்கரமாக ஏறப்போகிறது. அப்போது மின்சாரக் கட்டணத்தைக் கட்ட முடியாமல் நமது மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் நிலை உருவாகும்.துண்டிக்கப்பட்ட நம் இணைப்புகளில் இருந்து கிடைக்கும் உபரி மின்சாரத்தை சேமித்து, அதனைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மகிழ்ச்சியாக வழங்கப் போகிறார்கள். இப்படியாக நம் எதிர்காலம் விடிய இருக்கிறது.  

ஆகவே, விழிப்புடன் இருப்பதற்கான தருணம் இது!
பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு நம்மால் தடுக்க முடியாது போனது. ஆனால் மின்கட்டண உயர்வு பற்றி நமது கருத்தைக் கேட்க ஒரு கூட்டம் நடக்க உள்ளது! அதில் நமது மறுப்பை ஆயிரமாய் குடும்பத்துடன் திரண்டு தெரிவித்தால் இந்த கட்டண உயர்வை நிச்சயம் தடுக்க முடியும்.
மின் கட்டணம் உயர்ந்தால் அனைத்துப் பொருட்களும் விலை உயரும். ( பால் கட்டணம் கூட மேலும் உயரும்.)
இதற்காகவாவது ஒரு மணி நேரம் நாம் செலவழிக்க மாட்டோமா?.. எப்பொழுதுமே நாம் நமது பிரச்சனைகளுக்கு வீதிக்கு வராததால் இழந்த்து ஏராளம். தனியார் கம்பெனிகளும், பன்னாட்டு கம்பெனிகளும் கொள்ளை அடிக்க நம் உழைப்பை தாரை வார்க்க விடவேண்டுமா?
வரும் திங்கள்30-01-12  காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட நாளன்று கருத்துக் கேட்பு கூட்டம் காலை 10.00 மணிக்கு  சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்கிறது. இதைமின்சார ஒழுங்குமுறை ஆணையமேநடத்துகிறது. ஆகவே அவர்களை கேள்வி கேட்போம்
அனைவரும் திரளுவோம். உங்கள் குடும்பத்தினருக்குச் சொல்லுங்கள், நண்பர்களுக்கு, அண்டை வீட்டாருக்கு, சக ஊழியருக்கு, உறவினருக்குச் சொல்லுங்கள். நாம் அனைவரும் ஒன்று கூடுவோம். இந்த கொள்ளையை தடுப்போம். அரசின் கஜானாவில் இருந்து தனியார் நிறுவனங்கள் சுரண்டிச் செல்லும் பணத்தை மீட்கச் சொல்லுவோம்.
நமது கோரிக்கைகள் இதுதான்
1.     தனியார்பன்னாட்டு நிறுவனங்களுக்கு மின்சாரத்தைக் கூடுதல் விலையில் விற்க வேண்டும்!
2.     வீடுகளுக்கு, சிறு தொழில்நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்!
3.     அனைவருக்கும் ஒரே மாதிரியாக மின்சாரம் விநியோகிக்கப்பட வேண்டும். சிலருக்குத் தடையற்ற மின்சாரமும், பலருக்கு மின்வெட்டும் மக்களாட்சியில் ஏற்புடையதல்ல!
4.     மின்சாரம் மக்களின் வாழ்வாதாரம்! கடைச்சரக்கல்ல! மின்சாரத்தைக் கடைச் சரக்காக்கிய 2003 மின்சார சட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.
5.     சந்ததிகளை அழிக்கும் அபாயகரமான குறுக்குவழி மின் உற்பத்தி முறையான அணு மின்சாரம் நமக்குத் தேவையில்லை!!
6.     மின்சார ஒழுங்கு முறை ஆணையம் கலைக்கப் படல் வேண்டும். மா நில அரசு சுய உற்பத்திச் செய்ய வழிவகை செய்யப்பட வேண்டும்.
7.     தனியாருக்கு ஆதரவாக செயல்பட்டு 50,000 கோடி ரூபாய்க்கு நட்டம் ஏற்படுத்திய முன்னால்இன்னால்  ஒழுங்குமுறை ஆணைய நீதிபதிகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட வேண்டும்.
சிறு தொழில்கள் பெருகட்டும்!! நமது வீட்டுப் பணம் சேமிப்பாகட்டும்!!
சென்னை மட்டுமல்லாது பிற இடங்களிலும் கருத்துக் கேட்பு நடத்தப் படுகிறது. அந்த ஊரில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு சொல்லுங்கள். நாம் திரளுவோம். நாம் எதிர்ப்பு தெரிவித்தால் நிலை மாறும். கட்டணம் உயர்த்தப்படாது. போராடத் தயாராவோம்.
30-1-2012 –சென்னை ராசா அண்ணாமலை மன்றம் காலை 10.00 மணி
2-2-2012 – கோவை மாநகராட்சி கலையரங்கம்
6-2-2012 – திருச்சி செயின் ஜோசப் கல்லூரி
10-2-2012 – மதுரை மருத்துவகல்லூரி
அனைவரும் இந்த கூட்டங்களுக்கு செல்வோம்,  உங்கள் குடும்பத்தினருக்குச் சொல்லுங்கள், நண்பர்களுக்கு, அண்டை வீட்டாருக்கு, சக ஊழியருக்கு, உறவினருக்குச் சொல்லுங்கள். நாம் அனைவரும் ஒன்று கூடுவோம். இந்த கொள்ளையை தடுப்போம். அரசின் கஜானாவில் இருந்து தனியார் நிறுவனங்கள் சுரண்டிச் செல்லும் பணத்தை மீட்கச் சொல்லுவோம்.
விலை உயர்வு விவரம்
தற்போது வீட்டுக்கு 
75பைசாவிலிருந்து – 150 பைசா
150பைசாவிலிருந்து – 200 பைசா
250 யூனிட்டுக்கு மேல் – 575 பைசா
கடைகளுக்கு – 200 + 700 பைசா
ஆனால் IT நிறுவனங்களுக்கு கட்டணம் 700 பைசாவுக்கு பதில் 500 பைசாவாக குறைக்கப்பட இருக்கிறது.
தனியார் அடித்த கொள்ளைகளை அறிந்து கொள்ளுங்கள்
ஏழு தனியார் மின் நிலையங்கள் கொண்டுபோன சட்ட புறம்பான தொகை 400 கோடி
7000 காற்றாலைகள் பெற்ற மொத்த மானியம் 10,280 கோடி
7000 காற்றாலைகள் பெற்ற சலுகை கடந்த ஐந்து ஆண்டுகளில் 5150 கோடி
189 கோட்ட தனியார் வழக்கில் மின்சார ஆணையம் வழங்கியது 1050 கோடி
மக்கள் நாம் திரள்வோம். மின்சாரத்தின் பெயரால் அணு உலை வாயிலாகவும், நேரடி கட்டணம் மூலமாக நம் அடிவயிற்றில் கைவைப்பதை இன்றே தடுப்போம்.
இந்தச் செய்தியை பரப்ப உதவுங்கள். நண்பர்களிடத்தில் பகிருங்கள். அனைவரையும் வரச் சொல்லுங்கள். அனைவரும் இணைவோம்.
நாம் வெல்வோம்






மே பதினேழு இயக்கம்.
9600781111 | 9444146806 | 9443486285
————————————————————————————————
தரவுகள்
நன்றிதமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு | பதிவு 141/திருச்சி

Leave a Reply