தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் – பத்திரிகை செய்தி

- in நினைவேந்தல்
தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் – பத்திரிகை செய்தி

தினத்தந்தி
  


http://www.dailythanthi.com/article.asp?NewsID=731939&disdate=5/21/2012

தினமணி 
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தையொட்டி மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில்
தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு தேவை: பாஸ்வான்

சென்னை, மே 20: தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.

 முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுத் தினத்தையொட்டி மே 17 இயக்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மெரினாவில் கண்ணகி சிலை அருகில் நடைபெற்றது.

 ராம் விலாஸ் பாஸ்வான்

 நினைவு தீபத்தை ஏற்றி வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார்.

 பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

 இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இனப்படுகொலை புரிந்த ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும். மரண தண்டனை கூடாது என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை என்றார் அவர்.

 வைகோ: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

 மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இலங்கை அரசின் அட்டூழியங்கள் ஒழிய வேண்டும்’ என்றும் கூறினார்.

 இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, எம்.நடராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னியரசு, தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருமுருகன் காந்தி, கவிஞர்கள் அறிவுமதி, காசி ஆனந்தன், ஓவியர்கள் மருது, வீரசந்தானம் உள்பட பலர் பங்கேற்றனர். http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%3A+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&artid=601110&SectionID=129&MainSectionID=129&SEO&SectionName=Tamilnadu

தினகரன் 

ராம்விலாஸ் பஸ்வான் கோரிக்கை
ராஜபக்சே மீது நடவடிக்கை வேண்டும்

திருச்சி: இலங்கையில் மனித உரிமை மீறிய ராஜபக்ஷே மீது சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என லோக் ஜனசக்தி தலை வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார். திருச்சியில் நேற்று ராம்விலாஸ் பாஸ்வான் அளித்த பேட்டி: இலங்கையில் தமிழ் மக்களை ராஜபக்ஷே அரசு மனித உரிமைகளுக்கு எதிரான வகையில் இனப்படுகொலை செய்தது கண்டிக்கத்தக்கது. இலங்கையில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 1 லட்சம் பேரை விடுவிக்க வேண்டும். அதற்கு முன்னதாக தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் முகாமிட்டுள்ள ராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு தேவையான மருந்து, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும், இருப்பிட வசதிகளை ஏற்படுத்தி தரவும் வகை செய்ய வேண்டும். மனித உரிமை மீறல் அடிப்படையில் ராஜபக்ஷே மீது நடவடிக்கை எடுக்க சர்வதேச அமைப்புகள் முன்வரவேண்டும்.  தலித் உரிமை மீறலுக்கு குரல் கொடுக்க தவறிய அன்னா ஹசாரே, லோக் பால் மசோதாவுக்கு எதிராக குரல் கொடுப்பது தவறான செயல் என்றார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=13344

விகடன்

தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு தேவை:பாஸ்வான்

சென்னை:தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுத் தினத்தையொட்டி மே 17 இயக்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மெரினாவில் கண்ணகி சிலை அருகில் நடைபெற்றது.

ராம் விலாஸ் பாஸ்வான்,நினைவு தீபத்தை ஏற்றி வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.இனப்படுகொலை புரிந்த ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

முருகன், சாந்தன்,பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும்.மரண தண்டனை கூடாது என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை” என்றார்

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில்,”தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும்,இலங்கை அரசின் அட்டூழியங்கள் ஒழிய வேண்டும்’ என்றும் கூறினார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, எம்.நடராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னியரசு,தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன்,மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருமுருகன் காந்தி,கவிஞர்கள் அறிவுமதி,காசி ஆனந்தன், ஓவியர்கள் மருது,வீரசந்தானம் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

http://news.vikatan.com/index.php?nid=8126#cmt241

நக்கீரன் 

 இலங்கை அரசு இனப்படுகொலை அரசு! –
மெரினாவில் மக்கள் முழக்கம்!

“மறக்க மாட்டோம் மன்னிக்க மட்டோம்! தமிழீழ மக்கள் இனப்படுகொலையை மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்! ஐ.நா. சபையே தமிழீழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்து!” சென்னை மெரினா கடற்கரையில் மே 20 ஞாயிறு அன்று மாலை விண்ணதிர எதிரொலித்த முழக்கங்கள் இவை.

தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து, அனைத்துலக விசாரணை நடத்த வேண்டும், தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் மே-20 அன்று வீரவணக்க ஒன்றுகூடலுக்கு, மே பதினேழு மற்றும் பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. அதன்படி, இன்று எழுச்சியுடன் ஒன்றுகூடல் நடைபெற்றது.

மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகில் நடைபெற்ற ஒன்றுகூடலுக்கு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் தலைமை வகித்தார். முன்னதாக, ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் ஈகச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, லோக் சனசக்தி கட்சித் தலைவர்  இராம் விலாஸ் பாஸ்வான், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, ம.தி.மு.க. தென் சென்னை மாவட்டப் பொறுப்பாளர் வேளச்சேரி மணிமாறன், பெ.தி.க. பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், பாவலர் அறிவுமதி, புதிய பார்வை இதழாசிரியர் திரு. ம.நடராஜன், ஓவியர் வீரசந்தனம், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், புலவர் இரத்தினவேலவர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் மற்றும் உணர்வாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

போர் குற்றம் – இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் இயக்கம் சார்பில், தமிழீழத்தில் வாக்கெடுப்பு நடத்தக் கோரி 1 கோடி கையெழுத்துகள் பெறுகின்ற கையெழுத்து இயக்கம் மெரினா வந்த மக்களிடம்  நடத்தப்பட்டது. இராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட பெருந்திரளானோர் இதில் கையெழுத்திட்டனர்.

“இலங்கை அரசு இனப்படுகொலை அரசு! சர்வதேச விசாரணையை உடனே நடத்து!”, “இந்திய அரசின் துரோகத்தை மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்” உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பியவாறு, மெழுவர்த்தி ஏந்தியபடி சிறுவர்களும், பெண்களும் என பொதுமக்கள் பெருந்திரளாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

http://www.nakkheeeran.com/Users/frmNews.aspx?N=76134

தமிழ் வெப்துனியா

தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு – பாஸ்வான்

”தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்று லோக் ஜனசக்தி கட்சியின் தலைவ‌ர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுத் தினத்தையொட்டி மே 17 இயக்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மெரினாவில் கண்ணகி சிலை அருகில் நடைபெற்றது.

ராம் விலாஸ் பாஸ்வான் நினைவு தீபத்தை ஏற்றி வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பே‌சிய அவ‌ர், இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இனப்படுகொலை புரிந்த ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும். மரண தண்டனை கூடாது என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை என்றார் ப‌ஸ்வா‌ன்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1205/21/1120521007_1.htm

தட்ஸ் தமிழ் 

தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: ராம் விலாஸ் பாஸ்வான்
சென்னை: இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுத் தினத்தையொட்டி மே 17 இயக்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகில் நடைபெற்றது.

ராம் விலாஸ் பாஸ்வான் நினைவு தீபத்தை ஏற்றி வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.

பின்னர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறுகையில், இலங்கையில் தனித் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இனப் படுகொலை புரிந்த ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

சுதந்திர தமிழின தேசம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்துவதே சரி. இலங்கையில் நடந்த போரின்போது இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும். இதற்கு ஐ.நா. முழு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும். 1967ம் ஆண்டு முதல் எங்கள் கட்சியின் கொள்கையே தூக்குத் தண்டனை கூடாது என்பதுதான் என்றார்.

நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான எம்.நடராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னியரசு, தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருமுருகன் காந்தி, கவிஞர்கள் அறிவுமதி, காசி ஆனந்தன், ஓவியர்கள் மருது, வீரசந்தானம் உள்பட பலரும் இதில் பங்கேற்றனர்.

English summary
Strongly supporting the creation of Tamil Eelam, the Lok Janshakthi Party president Ram Vilas Paswan favoured a referendum under the supervision of international community to determine the future of Sri Lankan Tamils.

http://tamil.oneindia.in/news/2012/05/21/tamilnadu-ram-vilas-paswan-backs-tamil-eelam-cause-154297.html

4TamilMedia

ஈழத்தமிழர்களுக்காக மெரினாவில் அஞ்சலி செலுத்திய வெளிச்சப் பூக்கள்!

இலங்கையின் இறுதியுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும் மெழுகுவர்த்தி நினைவுச்சுடர் ஏந்தும் நிகழ்வு இன்று (மே 20) சென்னை மரினா கடற்கரையில் நடைபெற்றது.

மே 17 இயக்கம் மற்றும் பெரியார் திராவிடர் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யபட்ட இந்நினைவு சுடர் ஏந்தும் நிகழ்வில் தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு, முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வு பற்றி எமது விசேட நிருபர் தெரிவிக்கையில் :

   மாலை நான்கு மணிக்கே மெரீனாவின் கண்ணகி சிலை பின்புறம் மக்கள் கூட ஆரம்பித்து விட்டார்கள்.  கடலை நோக்கிச் செல்ல புறப்பட்டவர்கள், கேள்விக்குறியுடன் கூட்டத்தை எட்டிப் பார்த்து ‘இது, இலங்கை போரில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவு சுடர் ஏந்தும் நிகழ்வு’ என்றதும், அப்படியே நிகழ்வில் கலந்து கொள்ள வந்துவிட்டார்கள்.

    குழந்தைகளுடன் வந்த பெண்கள், “ஈழத்தமிழர்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப் போறதா சொல்றாங்க.. இதுல கூட நாம் பங்கு எடுத்துக்கலேனா நாம தமிழரா இருக்கவே லாயக்கில்லை” என்றபடி தாமும் அமர்ந்து கொண்டு தன குழந்தைகளையும் பக்கத்தில் அமர்த்திக் கொண்டனர். அக்குழந்தைகளும், பெற்றோர் அருகிலேயே அமைதியாக அமர்ந்து கொண்டு மெழுச்சுடர்களை ஏந்திவண்ணம் காட்சி அளித்தனர்.

  ‘தமிழர்களின் தாகம் தனிஈழம்’, ‘ஏகாதிபத்தியத்தின் வேட்டைக் காடல்ல தமிழர் பெருங்கடல்’, ‘இலங்கை ஒரு தோல்வியுற்ற ஜனநாயக  நாடு, அங்கே நீதி கிடைக்காது’, இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மீது  சர்வதேச விசாரணை நடத்து’ போன்ற வாசகங்கள் தாங்கிய அட்டைகளுடன் மக்கள் கூட்டம் கடல் அலையாகவே திரண்டிருந்தது.

     சரியாக மாலை ஐந்து மணிக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேசிய தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் தலைவர் பழ.நெடுமாறன், மாநிலங்களவை உறுப்பினர் ராம்விலாஸ் பாஸ்வான், வன்னியரசு, வித்யாதரன், குடந்தை அரசன், புலமைப் பித்தன், குளத்தூர் மணி, அருண் ரஷீத், போன்ற மேலும் பல தமிழின உணர்வாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அனைவரும்  ஈழத்தமிழர்கள் நினைவேந்தல் சமாதியில் ஜோதி ஏற்றினர். பின்பு நினைவேந்தல் மெழுகு தீபத்தை கைகளில் ஏந்தி, போரில் உயிர் நீத்த தமிழ் மக்களுக்காகவும், போராளிகளுக்காகவும் தங்களது அஞ்சலியை செலுத்தினர். இந்நிகவின் போது ஒலித்த மக்களின் வீரமுழக்கமும், அதை தொடர்ந்து இடம்பெற்ற திருநெல்வேலி, முரசு கலைக் கூடம் சேர்ந்த கலைக் குழுவினரின் பறை இசையும் இந்நிகழ்வை மேலும் எழுச்சிகரமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் மாற்றியது. 

   தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஐ.நா நடத்த வேண்டும் என்பதும், இலங்கை அரசின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுமே,
மெழுகு தீபம் ஏற்றி, இந்நிகழ்வில் அஞ்சலி செலுத்திய பல நூற்றுக்கணக்கான பொது மக்களின் பிரதான இரு கோரிக்கைகளாக சர்வதேசத்திடம் முன்வைக்கப்பட்டது.

   அஞ்சலி முடிந்து கனத்த மனதுடன் கலந்து கொண்டவர்கள் வீடு திரும்பும் முன்னர், திருநெல்வேலி கலைக் கூடம் சேர்ந்த ஒரு இளைஞர், “மரத்துக் கிளியும், குருவியும் கூட மாலையானால் வீடு திரும்புது. எங்கள் ஈழத் தமிழர் சொந்த நாடு போக முடியலை” என்று பாடிய பாடல், நிகழ்வில் கலந்து கொண்டவர்களை கண் கலங்க செய்ததை அவதானிக்க முடிந்தது.

http://4tamilmedia.com/newses/india/5472-a-candle-light-vigil-on-the-marina


Leave a Reply