இந்தியா-இலங்கை பொருளாதார ஒப்பந்தங்களும், தமிழீழ மக்களின் வாழ்வுரிமை பற்றிய புரிதலும்

- in பரப்புரை
10-8-2012

இந்தியா-இலங்கை பொருளாதார ஒப்பந்தங்களும், தமிழீழ மக்களின் வாழ்வுரிமை பற்றிய புரிதலும்

இந்திய இலங்கை பொருளாதர ஒப்பந்தம் – ஐ. நா, அமேரிக்காவின் இலங்கை ஆதரவு, டெசோ மாநாடு மற்றும் அ. மார்க்ஸ் அரசியல் கோரிக்கையான “ தமிழீழ விடுதலை”யை பின்னுக்குத்

தள்ளும் சமூக மனித உரிமை முன்னெடுப்புகளும் அதனூடாக தமிழீழ மக்களை பொருளாதார கூலிகளாக மாற்றுவதும், மொத்த இலங்கையையும் (சிங்களர்களையும் சேர்த்து) சந்தையாகவும், மலிவு வேலையாட்களாகவும் மாற்றுவதும் என்பதான பின்னனி. தமிழீழ கோரிக்கையை முன்னெப்போதையும் விட மிகத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியம். கோரிக்கைகளை மையப்படுத்தலும், முன்வைத்தலும் சமரசமின்றி போராட்ட்த்திற்கு தயாராவதன் தேவையைப் பற்றிய மே பதினேழு இயக்கத்தின் சிறு அறிமுக விளக்கம். கடந்த சில மாதங்களாக நாங்கள் கவனித்து வந்த சர்வதேச சூழல், பொருளாதார முன்னெடுப்புகள்,மனித உரிமை என்கின்ற போர்வையில் வைக்கப்படும் சமரச முயற்சிகள், அறிவுசீவித்தளத்தில் சாதகமான கருத்தியலை உருவாக்குதல் என்பனவற்றின் சிறு தொகுப்பாக இதை வெளியிடுகின்றோம். சமகால அரசியலில் நாம் தோற்கமுடியாது , தோற்கவும் கூடாது என்கிற உறுதியின் வெளிப்பாடாக இதை வெளியிடுகின்றோம். இந்த விவாதத்தை மேலும் விரிவுபடுத்தி ஆராயவேண்டியது தமிழ்ச் சமூகத்தின் முன் உள்ள கடமையாக பார்க்கின்றோம். எங்களால் இயன்ற தரவுகளை தொகுத்தளிக்கின்றோம். யாரையும் விமர்சித்து இந்த தகவல் தொகுப்பை நாங்கள் வெளியிடவில்லை, மாறாக நாம் நம்மைச் சுற்றி நடக்கின்ற நிகழ்ச்சிகளை தொகுத்து, பகுத்து, புரிந்து கொள்வதே நமது போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான முதற்படி. விழிப்புடன் இருக்கவேண்டியிருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சிகள் எங்களுக்கு அறிவுறித்தி இருக்கின்றன. இந்த விளக்க காணொளியும், இதை அடுத்து விரிவாக வெளிவர இருக்கிற ஆதார கட்டுரை அறிக்கையும் அனைத்து தமிழர்களிடமும் எடுத்துச் செல்வது அவசியம். இந்த தகவல்கள் உங்களது பகுத்தறிவிற்கு ஏற்புடையதாக இருப்பின் அனைவரிடமும் இதை பரப்புங்கள்… நாம் ஒன்று திரள்வோம், அரசியல் திரட்சியை படைப்போம், ஒன்று கூடல் நமது அரசியல் போராட்டத்தின் முதற்படியும் அடிப்படை நடவெடிக்கையும் ஆகும். உணர்ச்சி ரீதியானவர்கள் மட்டுமல்ல நாம் ஆராய்ந்து செயலாற்றுபவர்கள் என்பதை நமது எதிரிகளுக்கு உணர்த்த வேண்டியுள்ள வரலாற்று கடமை நமக்குள்ளது. ஐ. நாவின் துரோகத்தை முதல் கட்ட்த்திலேயே (ஐ. நாவின் அறிக்கை) அம்பலப்படுத்தியது மே பதினேழு இயக்கம். தற்போது ஐ. நாவின் மறைமுக நோக்கத்தை வெளிப்படையாக செயல்படுத்த ஆரம்பிக்கும் பொழுது அதை உடைத்தெறிவது நமது உடனடி வரலாற்று கடமையாகிறது. கடமையை செய்வோம். கட்சி, இயக்கங்கள் எல்லை கடந்து நாம் இணைவோம்.

இன்று மாலை வள்ளுவர் கோட்ட்த்தில் அமெரிக்கா, ஐ, நாவின் முகத்திரையை கிழித்தும், இந்திய வர்த்தக சதியை உடைக்கவும் ஒன்று திரள்வோம். நண்பர்களுடன் அனைவரும் இணைவோம்.

நாம் வெல்வோம்.

மே பதினேழு இயக்கம்

Leave a Reply