“தமீழீழப் படுகொலையில் இந்தியா செய்த தூரோகங்கள்”

- in பரப்புரை

கடந்த சனிக்கிழமை 23.03.13 அன்று மாலை சென்னை வியாசர்பாடியில் ”புரட்சிகர தமிழர் இயக்கம்” நடத்திய இனப்படுகொலைக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் தமீழீழப் படுகொலையில் இந்தியா செய்த தூரோகங்கள் குறித்து தோழர் திரு.திருமுருகன் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் பேசிய பேச்சின் சுருக்கமான எழுத்து வடிவம். அன்பான தோழர்களே இப்பொழுது அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானமானது தமிழருக்கு எந்தவிதத்திலும் நன்மை செய்யாது என்பதை மாணவர்கள் இந்திய அரசுக்கும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளுக்கும் தெளிவுற வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு காலகட்டத்தில் நாம் இந்த கூட்டத்தை இங்கு நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்திய அரசு என்பது தமிழருக்கு ஒரு நாளும் நன்மை செய்யாத அரசு அது தமீழீழனததை இனப்படுகொலை செய்த இராசபட்சேவை நண்பணாக ஏற்றிருக்கின்ற ஒரு தூரோக அரசாங்கம்.அது எப்பொழுதெல்லாம் தமிழர்கள் ஒன்றுபடுகிறார்களோ அல்லது தமீழீழக் கோரிக்கைகளை முன் வைக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் தனது அரச பயங்கவாதத்தை மக்களுக்கு எதிராக கட்ட அவிழத்தப்ப்ட்டு போராட்டத்தை நசுக்கும் வேலையை செய்கிறது. தமிழக மீனவர்களை காக்க ஒரு போதும் தனது பாதுகாப்பு படையை அனுப்பாத இந்த இந்திய அரசுதான் கூடங்குளத்தில் போராடும் தனது மக்களுக்கு எதிராக தனது படையை தமிழருக்கு எதிராக நிறுத்துகிறது என்றால் இந்த அரசாங்கம் எப்படி தமிழருக்கான அரசாக இருக்க முடியும். இப்படிப்பட்ட அரசாங்கம் எப்படி தமிழருக்கான நீதியை பெற்றுத்தரும் அது ஒருபோதும் தமிழருக்காக பேசாது.அதற்க்கு பல காரணங்கள் உண்டு அதில் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன் அன்பான தமிழர்களே. இலங்கையில் போர் முடிந்தபின் சுமார் 50,000 (ஐம்பதாயிரம்)கோடிக்கும் அதிகமான அளவுக்கு இந்திய நிறுவனங்களின் முதலாளிகள் முதலீடு செய்திருக்கிறார்கள்.இலங்கையில் உள்ள பெட்ரோலிய கிணறுகளை விலைக்கு வாங்கிய நிறுவனத்தின் பங்குதாரர் யார் தெரியுமா தமிழர்களே தான் ஒரு வேட்டி கட்டிய தமிழன் நாடாளுமன்றத்தில் திருக்குறள் சொல்லிய தமிழன் என்று தம்பட்டம் அடிக்கும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தான். அதுமட்டுமில்லாமல் இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்கள் டாட்டாவினுடையது அங்குள்ள மருத்துவமனைகளை சிலவற்றை அப்பல்லோ மருத்துவமனை நடத்துகிறது.அதுமட்டுமில்லாமல் அங்குள்ள தொலைதொடர்பு துறையை ஏர்டெல் செய்கிறது.ஏர்டெல்லை பற்றி பல தகவல்களை நாங்கள் ஏற்கனவே பல சமயங்களில் அம்பலப்படுத்தியுள்ளோம்.அதை இன்று தங்களது கோரிக்கைகளாகவும் வைத்து ஏர்டெல் சேவையை மாணவர்கள் புறக்கணிக்கிறார்கள்.இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் செய்தாக வேண்டும்.இதுபோன்ற நிறுவனங்களின் நலனுக்காகவும் தான் தமீழீழத்தை இந்தியா அழித்தது.அதற்க்கு தமிழர்கள் நாம் எந்த வர்த்தகத்திற்க்காக தமீழீழத்தை அழித்தார்களோ அதே நிறுவனங்களை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.அது ஒவ்வொரு தமிழனின் கடமை. இதுதான் தோழர் பேசிய பேச்சின் சாரம்சம்.இந்த கூட்டத்தில் அய்யா பழ.நெடுமாறன்,திரு.மல்லை சத்யா,வழக்கறிங்கர் தோழர் அங்கயற்கண்ணி,புரட்சிகர தமிழர் இயக்கத்தின் முன்னோடிகள்,நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் தமிழ் உணார்வாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply