கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் – திருப்பூர் & கோவை

- in பரப்புரை
கோவை- திருப்பூரில் மே பதினேழு இயக்கம்- இன அழிப்பிற்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் இணைந்து ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம்.

 –  தமிழீழ படுகொலை ஒரு இனப்படுகொலையே
 –  இனபடுகொலையில் இந்தியா-அமெரிக்கா-இங்கிலாந்தின் பங்கு
 –  தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு
 –  பிப்ரவரி12 ஐ.நா அலுவலக முற்றுகையின் நோக்கம்

பற்றிய பிரச்சாரக் கூட்டம்.

கோவை:

ஞாயிறு 12-01-2014 காலை 10 மணிக்கு திவ்யோதயா அரங்கில் கோவை இரயில் நிலையம் அருகில்.

கோவையில் பங்கேற்போர் :

தோழர். கு.ராமகிருட்டிணன்,
தோழர். நெல்லை முபாரக்,
தோழர்.பாமரன்,
தோழர். உமர்கயான்,
தோழர். திருமுருகன்.

திருப்பூர்:

ஞாயிறு 12-01-2014 மாலை 5 மணிக்கு திருப்பூரில், பொதுக்கூட்டம்.

திருப்பூரில்  பங்கேற்போர்:

தோழர் ரபீக்,
தோழர். உமர்கயான்,
தோழர். திருமுருகன்
மற்றும் பேராசியர் கல்யாண சுந்தரம்.

அனைவரும் அவசியம் வரவும்

திருப்பூரில் கடந்த 12.01.2014ம் தேதி இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம், மேபதினேழு இயக்கம் இனைந்து நடத்திய பொதுக்கூட்டம்.  இக்கூட்டத்தில் சோசியல் டெமாக்கரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் மாநில துனைத்தலைவர் ரபிக் அகமது அவர்களும், நாம்தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை அமைப்பாளர் தோழர் கல்யாணசுந்தரம் அவர்களும், மேபதினேழு இயக்க ஒருங்கினைப்பாளர் தோழர்.திருமுருகன் அவர்களும், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்க ஒருங்கினைப்பாளர் உமர்கயான் ஆகியோர் உரையாற்றினார்கள்.திரளான மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

திருப்பூரில் 12.01.14 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் பேச்சிலிருந்து…

தமிழீழ பிரச்சனை என்பது இப்பொழுது சர்வதேச பிரச்சனையாக மாறியிருக்கிறது.குறிப்பாக 2009க்கு பிறகு தமிழீழம் என்ற கோரிக்கையை நகர்த்தி கொண்டிருப்பவர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள்.இதை நாங்கள் சொல்லவில்லை அன்பான தமிழர்களே மேற்குலகம் தங்களுக்குள் பகிர்ந்துகொணட ஆவணங்களில் இருக்கிறது.விக்கிலீங்கஸ்லில் பார்க்கலாம்.அவர்கள் போர்காலத்தில் அஞ்சம் அடைந்தது தமிழ்நாட்டை பார்த்துதான்.இப்பொழுதும் அவர்களுக்கு இதுதான் பிரச்சனையாக இருக்கிறது. ஆனால் நாம் என்ன செய்கின்றோம்.

அவர்கள் மிக நன்றாக ஆராய்ந்து வைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டை எப்படி உடைக்கலாம் என்று.அதன்படி தமிழ்நாட்டை சாதிகளாக உடைக்கும் பணியை செய்து முடித்திருக்கிறார்கள்.இது தான் இங்கே நடக்கிறது. அடுத்து இலங்கையில் எப்படி மகாவம்சம் என்ற நூலில் மூலம் தமிழர்களை வந்தேறிகள் என்று எழுத வைத்து விசத்தை வளர்த்தார்களோ அதேபோல இங்கே வந்தேறிகள் என்ற பிரச்சாரத்தின் மூலம் இந்த சமூகத்திலும் பிரச்சனையை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகவே அன்பான தமிழ்ர்களே இந்த செயல்நுனுக்கத்தை புரிந்துகொண்டால் மட்டுமேதான் தமிழகம் தப்பிக்கும்.இல்லையென்றால் இந்த தமிழ்சமூகம் இரண்டு மூன்று துண்டுகளாக உடைந்து நிற்க்கும்.

நாம் ஒன்றாக நிறக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஏனென்றால் ஈழத்தமிழர்களை அழித்து அதன் கடல்பரப்பை கைப்பற்றியவர்களுக்கு இந்த தமிழகத்தின் நிலப்பரப்பும் தேவைப்படுகிறது.தமிழன் இருக்கும்வரை அவன் ஏகாதிபத்தியத்திற்க்கு எதிராகவேதான் இருப்பான் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.எனவே அவர்கள் நம்மை அழிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் 30ஆண்டுகளுக்கு முன்பாகவே இதை செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

அன்பான தமிழர்களே சிறுத்தையின் காலடிதடத்தை நாம் அறிந்துகொள்ளும்போது சிறுத்தை பல மைல்களுக்கு அப்பால் நகர்ந்து போயிருக்கிறதென்று அர்த்தம்.அதுதான் இந்த தமிழ்சமூகத்திற்க்கும் நடந்துகொண்டிருக்கின்றது.இப்பொழுதுதான் நாம் தடத்தை பார்க்கின்றோம்.ஆனால் இந்தமாதிரி பிரச்சனைகளை விடுதலை புலிகள் மிக சாதுர்யமாக கையாண்டார்கள்.அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவில்லை அதுதான் உண்மை.நன்றாக புரிந்துகொள்வோம் தமிழர்களே விடுதலை புலிகள் அழிக்கபட்டுவிட்டார்கள் என்று சொன்னபிறகுதான் நமக்கு இவ்வளவு பிரச்சனையும் முல்லை பெரியாறிலிருந்து கூடங்குளம்,மீத்தேன் என்று தொடருகிறது.அனால் தமிழ்சமூகம் இன்றும் கற்றுக் கொள்ளவில்லை தமிழீழப்படுகொலை நடந்த போது எப்படி வெறும் அடையாள போராட்டங்களை நடத்தினோமோ அதுபோன்ற போராட்டத்தை தான் இடிந்தகரைக்கும் நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

இடிந்தகரை போராட்டம் மிகப்பெரிய போராட்டம். இடிந்தகரை தமிழ்சமுக போராட்ட களத்தின் ஆன்மா.ஆனால் இடிந்தகரைக்கு வெளியே ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நாம் நடத்தவில்லை.நாம் நினைத்திருந்தால் பல்லாயிரம் பேர் திரண்டு தமிழகத்தின் தலைநகரத்தில் நின்று அந்த அனு உலையை மூடியிருந்தால் இந்தியா தமிழகத்தை பார்த்து அச்சப்பட்டிருக்கும்.ஒரே ஒரு போராட்டத்தை நாம் ஒன்றாக இணைந்து நின்று நாம் நடத்தியிருந்தால் இது சாத்தியமாகியிருக்கும்.எப்படி இஸ்லாமியர்கள் அமெரிக்காவை எதிர்த்து தலைநகரில் அமெரிக்க தூதரகத்தின் முன் ஆசியாவிலேயே இதுவரை இல்லாத அளவிற்க்கு ஒரு போர்குணத்தோடு போராட்டத்தை நடத்தினார்க்ளோ அதுபோல ஒன்றை இந்த தமிழ்சமூக செய்திருந்தால் மட்டுமே அது வலிமைவாய்ந்த மாற்று சமூகமாக இருக்க முடியும்.இதை நாம் செய்ய மறுத்து வெறும் 100பேர் 200பேராக சேர்ந்து நின்று அடையாளபோராட்டத்தைதான் நடத்துவோம் என்றால் நாம் 2009ல் தமீழீழத்திற்க்கு என்ன துரோகத்தை செய்தோமோ அதேதான் இப்பொழுதும் செய்துகொண்டிருக்கின்றோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம்.ஒரே ஒரு போராட்டத்தை நமக்குள்ளிருக்கும் முரண்களை களைந்து ஒன்றாக தமிழர்களாக நின்று நடத்துவோம்.நாங்கள் அதற்க்கு தான் முயலுகின்றோம் எங்கள் எல்லா போராட்டங்களிலும் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்களை அதனடிப்படையில் தான் அழைக்கின்றோம்.

நம் எதிரிகள் வலிமைவாய்ந்தவர்கள் அவர்கள் நம்மை அழிக்க 24நேரமும் வேலை செய்கிறார்கள் அவர்கள் வெற்றி பெற்றவர்கள் அவர்களை வீழ்த்த வேண்டுமெனில் நாம் நமக்குள்ளிருக்கும் முரண்களை கடந்து ஒன்றாக இணைவதை தவிர வேறுவழியில்லை.நாங்கள் எதிரிகளை வெற்றபிறகு தான் எங்களுகுள்ளிருக்கும் முரண்களை பற்றி விவாதத்தை ஆரம்பிக்கலாம் என்ற உறுதியுடன் இருக்கின்றோம்.இதில் மாற்று கருத்தில்லை.நாங்கள் இனிமேலும் எம் தமிழ்சமூகம் தோற்றுபோவதை விரும்பவில்லை.

தமிழீழ விடுதலை என்ற கோரிக்கை அழிக்கப்படுமாயின் தமிழசமூகம் அழிந்துவிட்டது என்றுதான் அர்த்தம். தமிழ்சமூகத்தின் முக்கியமான போராட்டம் தமிழீழம். அது ஏன் பின்னடைவுக்கு உள்ளானது என்றால் தமிழ்நாடு அரசியல் எழுச்சி பெறவில்லை.அந்த தமிழீழத்தை அழிக்க இலங்கையோடு துணைபோன இங்கிருப்பவர்கள் இப்பொழுது தமிழ்நாட்டையும் அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.நாம் அவர்களை இதுவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்பது தான் மிக வருத்தம்.

2009ல் முள்ளிவாய்க்கால் முடிந்த பின்பு அந்த முள்வேலி முகாம்களை அமைக்க இலங்கைக்கு யோசனை சொன்ன இந்தியாவை சேர்ந்த M.K.நாரயணன் இன்று வரை எந்தவித உறுத்தலுமில்லாமல் சென்னைக்கு வந்து செல்கின்றான்.இந்த முள்வேலி முகாம் திட்டம் வேறு எங்கேயும் வைத்து இறுதி செய்யப்படவில்லை தமிழர்களே சென்னையில் வைத்துதான் இதை இறுதி செய்கிறார்கள். எம்.எஸ்.சுவாமிநாதனும் என்.ராமும் சுப்ரமணிய சுவாமி இணைந்து நின்று செயல்படுத்தியவை இவை.

நாம் என்ன செய்தோம்.இன்று தி.இந்து தமிழில் வந்திருக்கின்றது என்றால் இதை விட நமக்கு என்ன அவமானம் வேண்டும் என் அன்பான தமிழர்களே.
போருக்கு பின் எம்.எஸ்.சுவாமிநாதன் நான் இலங்கைக்கு போவதில்லை என்றும் அங்கு விவசாய அபிவிருத்திகளை செய்யபோவதில்லை என்றும் அறிவித்துவிட்டு கமுக்கமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழ்பகுதியில் எப்போதும் இல்லாத அளவிற்க்கு நெல் விளைந்திருக்கின்றது என்று பேட்டி கொடுக்கின்றான்.தமிழர்களை விவசாய கூலிகளாக மாற்றியிருக்கின்றான் இந்த சுவாமிநாதன் இவன் இன்னும் சென்னையில்தான் இருக்கின்றான் இவனை போன்றவர்களை நாம் இன்னும் கேள்வி எழுப்பவில்லை.இவர்களை எதிர்த்து தமிழ்சமூகமாகிய நாம் என்ன போராடினோம் நம் உள்முரண்களை பேசி பேசியே வீணாய்போணோம்.

நன்றாக தெரிந்துகொள்ளுங்கள் தமிழர்களே தமிழ்சமுகத்தின் போரட்டகளத்தின் தலைமை தமிழகம்தான்.தமிழ்நாட்டில் நாம் ஒன்றாக போராடியிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது.இப்பொழுது சொல்கின்றேன் இலங்கையில் நடக்கும் பிரச்சனையை எதிர்த்து போராட வேண்டுமென்றால் மயிலாப்பூரிலும் மாம்பலத்திலும் செய்தாலே போதும்.மயிலாப்பூரும் மாம்பலமும் பதில்சொல்லவைத்தாலே போதும் இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.இதுவரை அப்படிப்பட்ட போராட்டத்தை நாம் நடத்தவேயில்லை என்பதுதானே உண்மை.இதைநாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

சுப்ரமணியசாமி பேசுகின்றான் இராசபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டுமென்று என்.ராம் பேசுகின்றான் தமிழீழம் இனி சாத்தியமில்லை என்று நாம் என்ன எதிர்வினை இவர்களை எதிர்த்து ஆற்றினோம் தமிழர்களே.வெட்டி வீரங்களை பேசுவதற்க்கு நமக்கு இதுவரை யோக்கியதை வரவில்லை.நாம்விடுதலை புலிகளிடமிருந்து கற்றுக்கொள்ளவில்லை வெட்டி வீரங்களைதான் பேசிக்கொண்டுயிருக்கின்றோம்.விடுதலை புலிகள் குறைவாக பேசினார்கள் ஆனால் வேலையை நிறைவாக களத்திலே செய்துகாட்டினார்கள்.அவர்களை முன்மாதிரி கொண்டோமென்றால் அவர்கள் எந்த குணத்தை வைத்திருந்தார்களோ அதை போல நாம் செயல்படவேண்டும்.

Leave a Reply