சர்வதேச ஆதரவினை இலங்கை அரசிற்கு ஏற்படுத்தியதிலும், புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்ததிலும், உலக அளவில் தடையை கொண்டுவருவதிலும் இவரது பங்கினை மறுக்க இயலாது. அமெரிக்காவின் தெற்காசிய கொள்கையினை வடிவமைப்பதில் செயலாற்றுபவரும், புஷ் அரசு, ஒபாமா அரசு என அனைத்திலும் தமது கருத்துக்களைக் கொண்டு வழிநடத்துவதில்முக்கியமானவர
இவர் கடந்த வருடம் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு சொன்னதை உங்களுக்கு நினைவுபடுத்துவது அவசியம்.
’இலங்கை அரசே குற்றங்களை விசாரிக்கவேண்டும்’ என்று தீர்மானம் கொண்டு வந்துவிட்டு, தாங்கள்தான் தமிழர்களை காக்க வந்த தேவதூதர்கள் என்று அறிக்கை விட்டுக்கொண்டிருந்தவர்கள்,
இந்தியா தீர்மானத்தில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு முன்பாகவே பலவீனமான இலங்கை ஆதரவு, புலிகள் எதிர்ப்பு தீர்மானமே அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டது. அத்தீர்மானத்தில் “இலங்கை அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்கிற பகுதிகளை இந்தியா கொண்டுவந்தது. பலவீனமான தீர்மானத்தினை மேலும் நீர்த்துப் போகச் செய்தது.
இவரது கடந்த கால செயல்பாடுகளையும், இலங்கை அரசின் மீதான நிலைப்பாட்டினையும் தொடர்ச்சியாக உங்களுக்கு அம்பலப்படுத்துகிறோம். அமெரிக்காவின் தெற்காசிய-தமிழீழம் சார்ந்த கொள்கைகளை புரிந்து கொள்ள இது பெருமளவில் உதவும்.
இந்த அதிகாரிகள் வடிவமைத்த கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஈழ ஆதரவு போராட்டங்கள் திசை திருப்புகின்ற முயற்சியை காண்கிறோம். தொடர்ச்சியாக ஆதாரங்கள் அடிப்படையில் பேசலாம்.