தமிழர்களின் கோரிக்கைகள் அடங்கிய மாதிரி வரைவு தீர்மானம் வெளீயீடு

- in பரப்புரை
தமிழர்களுக்கு என்ன தீர்வு வேண்டுமென்று தமிழர் தரப்பிடம் கலந்து ஆலோசிக்கமால் இதுதான் தீர்வென்று தமிழர்களின் அர்சியல் கோரிக்கைகளை மறுதலித்தும் அங்கு நடந்த இனப்படுகொலையை வெறுமனே சிறுபான்மையினருக்கான மோதல் என்று சுருக்கி ஆண்டுதோறும் வெற்று தீர்மானங்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டுவருவதை கண்டித்தும்,

தமிழர்களின் கோரிக்கைகள் உள்ளடங்கிய ஒரு மாதிரி தீர்மானத்தை கடந்த எட்டு மாதங்களாக பல்வேறு சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து தயார் செய்யப்பட்ட மாதிரி வரைவு தீர்மானமானது தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் இயக்கங்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் ஒப்புதலோடு இன்று -23.03.14 – மே 17 இயக்கத்தினால் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைப்புகள் மற்றும் கட்சிகள்:

1.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
 2.உலகதமிழர் பேரமைப்பு
 3.மனிதநேய மக்கள் கட்சி
 4.தமிழக வாழ்வுரிமை கட்சி
 5.தமிழ்தேச பொதுவுடைமை கட்சி
 6.விடுதலை தமிழ்புலிகள் கட்சி
 7.தந்தை பெரியார் திராவிடர் கழகம்
 8.சோசியல் டெமக்காரடிக் பார்டி ஆப் இந்தியா (SDPI)
 9.தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
 10.தற்சார்ப்பு விவசாயிகள் சங்கம்
 11.இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமியர் இளைஜர் இயக்கம்
 12.தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
 13.தமிழ் இளைஞர்கள் மற்றும் மாண்வர் கூட்டமைப்பு
 14.பாலசந்திரன் மாணவர் இயக்கம்
 15.கலகம் (இயக்குனர் வ.கீரா)
 16.தமிழர் முன்னேற்றக்கழகம்
 17.முற்போக்கு மாணவர் முன்னனி
 18.மே17 இயக்கம்

 

பத்திரிக்கையாளர் சந்திப்பு செய்தி

தமிழர்களின் கோரிக்கைகள் அடங்கிய மாதிரி தீர்மானத்தை பல்வேறு தமிழ் அமைப்புகளின் ஒப்புதலோடு மே 17 இயக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிட்டது.அதுசம்பந்தமான இன்றைய தினதந்தி,தினகரன் உள்ளிட்ட பத்திரிக்கைகளில் வந்துள்ள பத்திரிக்கை செய்தி

 

Leave a Reply