ஐநா மனித உரிமைக் கூட்டத்தொடரில் மரண தண்டனை ஒழிப்புக்கு ஏதிரான தீர்மானத்தை இந்தியா உட்பட 12 நாடுகள் முன்மொழிந்துள்ளன

- in பரப்புரை

தற்போது நடந்து முடிந்த ஐநா மனித உரிமை கூட்டத்தொடரிலே மரண தண்டனை ஒழிப்பு குறித்து 12நாடுகள் சேர்ந்து ஒரு தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறாரகள். அதை சீனாவும் இந்தியாவும் அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் சேர்ந்து எதிர்த்து வாக்களித்து அந்த தீர்மானத்தை தோற்கடித்திருக்கிறார்கள்.

இந்தியா இப்படி தான் செய்யுமென்பது நாம் அறிந்ததே. அது கடந்த காங்கிரஸ் ஆட்சியென்றாலும் தற்போதைய பிஜேபி ஆட்சியாக இருந்தாலும் இதுதான் நடக்கிறது. ஆனால் அதுவெல்ல விசயம். இந்த தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகள் கூறிய கருத்து தான் மிக முக்கியம்.

”நாம் நாகரிகம், முன்னெற்றம் என்ற பல்வேறு சொற்களை பயன்படுத்தி நாம் மேம்பட்டவர்களாக ஆகிவிட்டோமென்று சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறோமே தவிர அதை நோக்கிய பயணத்தில் ஒரு அடியேனும் நேர்மையாக எடுத்து வைத்திருக்கின்றோமா என்றால் இல்லை என்பதே உண்மை. ஆகவே அதற்கான முதல் படியாக இயற்கை வழங்கும் உயிரை அதிகாரத்தின் மூலம் எடுக்கும் உரிமையை கொண்ட இந்த மரணதண்டனை நீக்குவோம்.

மேலும் மரணதண்டனையை திவீரமாக ஆதிரிக்கிற நாடுகள் சொல்லும் வாதமான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும், பெண்களுக்கு பாதுகாப்பில்லை போன்றவை (அமெரிக்காவும், சீனாவும் சவுதி அரேபியாவும் சொல்பவை) மரணதண்டனை நடைமுறையிலிருக்கும் நாடுகளில் குறைந்திருக்கிறதா? என்று நெஞ்சைத்தை தொட்டுச்சொல்லுங்கள். அதேபோல நாங்கள் ’அரிதினும் அரிதான’ வழக்குகளில் தான் மரணதண்டனையை கொடுக்கிறோமென்று சொல்லுகின்ற நாடுகளை(இந்தியா) சேர்ந்தவர்களே அரிதிலும் அரிதென்று யார் முடிவெடுக்கிறார்கள். நீதிபதியாக இருக்கிற ஒரு மனிதர் தானே! அவருக்கு சுய விருப்பு வெறுப்பு இருக்கும் தானே அப்புறம் எப்படி அது சரியான நீதியாக இருக்கும்.

இப்படி ஆளாளுக்கு ஒரு காரணத்தை சொல்வது என்பது தனது அதிகார எல்லையை காப்பாற்றிக் கொள்ளத்தானெ ஒழிய வேறொன்றுமில்லை. ஆகவே மனித உயிர்களை விரும்புகிற அனைத்து நாடுகளும் இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.”

இப்படி தெளிவாக விளக்கம் கொடுத்தபின்னும் தொடர்ந்து மனித உரிமை கூட்டத்தில் இந்தியா மரணதண்டனை ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராகத்தான் வாக்களிக்கிறது. ஒருமுறை பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் தூக்கை இரத்து செய்யசொல்லி நடத்திய பொதுக்கூட்டத்தில் தோழர் மணியரசன் இப்படிச்சொன்னார்.

“காந்தி தேசம் இது காந்தி தேசமென்று மார்தட்டுகிறீர்களே அந்த காந்தி தான் மரண தண்டனை வேண்டாமென்று சொன்னார். அவர் சொன்னதையே ஏற்க மறுப்பீர்களென்றால் இனி மேல் இந்திய ரூபாய் நோட்டிலிருக்கும் காந்தி படத்தை எடுத்துவிட்டு தூக்கு கயிறை அச்சடியுங்கள். ஏன் இந்த போலி வேசமென்று கேட்டார்.”

நாமும் அதைத்தான் கேட்கிறோம் இன்னும் எத்தனை காலம் தான் உலகநாடுகளை இது காந்தியின் தேசம் அகிம்சையின் தேசமென்று சொல்லி ஏமாற்றப்போகிறீர்கள். ஒரு பக்கம் ஆடுகளின் மேல் அக்கறை கொண்டதைபோல நடித்துக்கொண்டே காசாப்பு கடைகாரர்களையும் கத்தியையும் உற்பத்தி செய்வது தான் நேர்மையா?

Leave a Reply