சனாதன வெறியால் கொல்லப்பட்ட காந்தி
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை
பாகிஸ்தான் கோரிக்கையை முஸ்லீம் லீக் கட்சியின் முகமது அலி ஜின்னா 1940-ம் ஆண்டில் தான் முன் வைத்தார். ஆனால் 1924-லிலேயே இந்து மகாசபையின் சாவர்க்கர், ஆர்.எஸ்.எஸ்.-இன் கோல்வால்கர் போன்ற சனாதனவாதிகள் மத ரீதியான இரு தேசக் கோட்பாட்டை முன்னிறுத்தினர். 1937-ல் இரு நாடு கொள்கையை இந்துமகா சபையின் தலைமை உரையில் கூறியவர் சவர்க்கார். அதற்கும் 17 ஆண்டுகளுக்கு முன்பே 1923-ல் யார் இந்து? (Who is Hindu) என்ற புத்தகத்தில் இந்துக்கள் ஒரே இனம், ஒரே மொழியான சமஸ்கிருதத்தைக் கொண்டவர்கள் என்று எழுதியவர்.
இந்தியா பாகிஸ்தானாக இரு தேசமாகப் பிரிய முதலில் காரணமானவர் சாவர்க்கர். தீவிரமான தேசபக்தராக இருந்திருந்தால் இரு தேசப் பிரிவினையை முதலில் கையிலெடுத்த சாவர்க்கரைத் தான் கோட்சே கொன்றிருக்க வேண்டும். ஆனால் இந்தப் பிரிவினைக்காக காந்தியைக் கொன்றதாக கோட்சே கூறியது முற்றிலும் பொய் என்பதே உறுதியான ஆதாரமாக இருக்கிறது.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9884864010