கலவரங்களின் புகலிடம் – ஆர்.எஸ்.எஸ்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை
ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்திய விடுதலை அறப்போராட்டம் காந்தி வழியிலும், சுபாசுசந்திர போஸ் ஆயுத வழியிலும் நடைபெற்றுக் கொண்டிருக்க; ஆர்.எஸ்.எஸ் மதவெறி ஊட்டும் பயிற்சிப் பட்டறை சாகாக்களை விரிவாக்கம் செய்து மாணவர்கள், இளைஞர்களைத் திரட்டி இந்து தேசம் அமைப்பதற்கான அடித்தளத்தையும் வலுவாக ஊன்றிக் கொண்டிருந்தனர்.
1927ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் நாக்பூரில் நடத்திய வகுப்புக் கலவரமே அது பரவலாக வளரக் காரணமாக அமைந்தது. சமீபமாக, வட இந்திய மாநிலங்களில் நடந்த ராமநவமி ஊர்வலம்வரை அச்சு அசல் மாறாமல் ஆர்.எஸ்.எஸ். அப்படியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்களின் ஊர்வலங்களின் போது முதலில் கல்லெறியும் மர்ம நபர்களை மட்டும் இதுவரையில் கண்டுபிடிக்கவே முடிந்ததில்லை.
காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே முதலில் ஆர்.எஸ்.எஸ்-சில் இருந்து பிறகு இந்து மகாசபையில் சேர்ந்தான். தீவிர இந்துத்துவ வெறிப் பரப்புரையாளனாக மாறியவன் இந்து ராஷ்டிரா என்ற பத்திரிக்கையும் நடத்தி வந்தான். சனாதனத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முயன்றதால் தான் சித்பவன் பார்ப்பனர்களான கோட்சே மற்றும் சிலரால் ஐந்து முறைக்கும் மேல் மகாத்மா காந்தி கொலை முயற்சி நடந்தது என்கிற உண்மையை வரலாற்றாசிரியர்கள் முன் வைக்கின்றனர்.
1967ல் “பசுவதைத் தடுப்பு” ஊர்வலம் என்று சொல்லி டெல்லியில் நிர்வாண சாமியார்களை முன்னால் அனுப்பிவிட்டு பின்னால் கொடூர வன்முறைகளை ஆர். எஸ்.எஸ் நிகழ்த்தியது. நாடாளுமன்றத்தைப் பயங்கர ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டு டெல்லி நகர வீதியெங்கும் வெறியாட்டங்களை நடத்தியது. 300க்கும் மேற்பட்ட கும்பல் காமராசரைக் கொல்ல அவர் தங்கியிருந்த இல்லத்திற்கு தீ வைத்தது.
மேலும் வாசிக்க:
மே 17 இயக்கக் குரல்
9444327010