சுரண்டப்படும் ஸ்விகி ஊழியர்களின் உழைப்பு
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை
ஸ்விகி நிறுவனம் இவ்வளவு நாள் தங்களுக்காக உழைத்துக் கொட்டிய உழைப்பாளர்களின் ஊதியத்தை குறைப்பதுடன், வேலை நேரத்தையும் அதிகரித்துள்ளதாக அத்தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், ஊக்கத்தொகை வழங்கப்படுவதும் நிறுத்தப்படுகிறது. இதனால், வாரம் ரூ. 5000 அளவிற்கு வருமானம் பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர். ஆகையால், இத்தொழிலை முழு நேர வேலையாக பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் என்ற நிலையில், கடந்த செப்டம்பர் 20 முதல் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக 180 முறை விநியோகம் செய்தால் அதிகபட்சம் ரூ. 11,500 ஊதியமாக பெற முடியும். இதற்கு ஒரு நாளைக்கு 26 முறை விநியோகிக்க வேண்டும். அதுவும் 16 மணி நேரம் வேலை பார்த்தால் மட்டுமே. இது சாத்தியமில்லாத ஒன்று என கூறுகின்றனர்.
மேலும், பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதால் ஒரு நாளைக்கு 200-250 ரூபாய் அதற்காகவே செலவிடும் நிலையில் பெட்ரோலுக்கான அகவிலைப்படி நாளொன்றுக்கு ரூ.24 மட்டுமே வழங்குகிறது. இதுவரை, வாரம் ரூ.3,500 சம்பாதித்தால் ஊக்கத்தொகையாக ரூ.1,500 வழங்கி வந்ததையும் புதிய முறையில் நிறுத்துகிறது.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9884864010