பெரியாரின் வடவர் ஆதிக்க எதிர்ப்பு
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை
வடவர்கள் நடத்தும் துணிக்கடைகளில் முன்னால் நின்று, எந்த வன்முறையிலும் ஈடுபடாமல், வணக்கம் கூறி “வடவர் கடைகளைப் புறக்கணியுங்கள், தமிழர் கடைகளைப் பயன்படுத்துங்கள்” என்று சொல்வதை ஒரு போராட்ட வடிவமாக 150 நாட்களுக்கு மேலாக நடத்தினார்கள்.
“இன்று பிரிவினை கேட்கும் நான் கிழவனாக இருக்கலாம். அதன் காரணமாக பலாத்காரத்தில் நம்பிக்கையற்றவனாக இருக்கலாம். நாளை நம் இளைஞர்களும் இப்படியே இருந்து விடமாட்டார்கள். இரத்த வெள்ளத்தின் மத்தியில் பிரிவினை கேட்பார்கள்; கத்தி முனையில் பிரிவினை கேட்பார்கள். ஆட்சியாளர்கள் இப்படி எல்லாம் நடக்க விடாமல் நம் நாட்டை ஒழுங்காக நமக்குப் பிரித்துக் கொடுத்து விட வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன்.” என 1950-இல் சென்னை சைதாப்பேட்டையில் ஆற்றிய உரையில் தொலைநோக்கு தமிழ்த்தேசிய அரசியலை தமிழக இளைஞர்களிடம் ஆழமாக விதைத்தார் பெரியார்.
“நீ போப்பா வெளியே, உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீ 2000 மைல், 1500 மைல் தூரத்திலே இருக்கிறாய். உன் பேச்சு எனக்குப் புரியாது, என் பேச்சு உனக்குப் புரியாது; உன் பழக்கம் வேறே; என் பழக்கம் வேறே; உன் நடப்பு வேறே… மரியாதையாகப் போய்விடு; ரகளை வேண்டாம். என்னத்துக்காக இவ்வளவு தூரத்தில் இருக்கிறவன் எங்களுக்கு இராஜாவாகணும்? நீ இல்லாவிட்டால் எங்களுக்கு என்ன நட்டம்; எங்களுக்கு என்ன உப்பு இல்லையா, சமுத்திரம் இல்லையா, மலையில்லையா, காடு இல்லையா? நெல் விளையவில்லையா? கம்பு விளையவில்லையா? என்ன இல்லை எங்களுக்கு? உனக்கு என்னாலே என்ன ஆகிறது? மரியாதையாய்ப் போ…” என தனது இறுதிப்பேருரையில் சீறினார்.
1938-ல் துவங்கிய தமிழ்நாடு தமிழருக்கே முழக்கத்திலிருந்து 1973-ல் தனது 96-வது தள்ளாத வயதிலும் சீறிய இந்த தியாகராய நகர் இறுதிப்பேருரை வரை வடவர் எதிர்ப்பில் சிறு சமரசமும் செய்து கொள்ளாதவர் தந்தை பெரியார்.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010