இட ஒதுக்கீடு போராட்டத்தில் பெரியாரும் பார்ப்பனியமும்
– மே17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை
அரசியல் சட்டத்தின் 14-வது விதியின்படி யாரையும் சாதி, மதம், இருப்பிடம் இந்த வகையில் பிரிவுபடுத்தக் கூடாது என்பது தான். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு 28-07-1950 அன்று சென்னை மாகாணத்தில் 1927 மற்றும் 1940-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்த வகுப்புவாரி இடப்பங்கீட்டு முறை ஆணை இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.
இடப்பங்கீட்டுக்கு எதிரான உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து பெரியார் பெரியதொரு மக்கள் கிளர்ச்சியை நடத்தினார். 06-08-1950 சென்னை மாகாண மக்கள் மன்றத்தில் பறிக்கப்பட்ட உரிமையை மீட்க பெரியார் அழைப்பு விடுக்கிறார். 14-08-1950 அன்று பெரியார் தலைமையில் சென்னை மாகாணம் தழுவிய பெருந்திரளான மக்கள் அந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். அதிலிருந்து தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்கள் நடைபெற்றது.
தமிழக நிலைமை டில்லியில் எதிரொலித்தது. இதனால் 18 ஜூன் 1951 அன்று பிரதமர் நேரு மற்றும் சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆகியோர் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தை (சட்ட பிரிவு 15(4)) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினர்.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010