துணைவேந்தர் நியமனம்: குஜராத்துக்கு ஒரு சட்டம், தமிழ் நாட்டிற்கு ஒரு சட்டமா?
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை
துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட முடிவுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில், மாநிலத்தின் மூன்று பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை ஆளுநர் ஆர்.என்.இரவி தன்னிச்சையாக நியமனம் செய்தும் உள்ளார்
ஜெயலலிதாவின் ஆதிக்கத்திற்கு பிறகான அதிமுக ஆட்சியிலிருந்து பாஜக ஆதரவு ஆளுநர்கள் மாநில அரசை மதிக்காது தன்னிச்சையாக செயல்பட்டு வருவது தொடர்கிறது. கடந்த ஆட்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆர்எஸ்எஸ்-பாஜகவை சேர்ந்த தமிழர் அல்லாத, கர்நாடகவை சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பலரது எதிர்ப்பையும் மீறி நியமித்தார்.
இந்நிலையில் தான் நாம், “அரசியல் சட்டத்தில் இல்லாத / வழங்கப்படாத துணைவேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக் கூடாது” என்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையை நினைவு கூறுவது மிகவும் அவசியமாகிறது. அந்த பரிந்துரையில், ‘அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படக் கூடாது’ எனவும் ‘துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வழிவகுக்கும்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ‘துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் கொடுப்பது என்பது அதிகார மோதலுக்கு வித்திடும்’ எனவும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010