ரஷியா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்தவும், நேட்டோ அமைப்பை கலைக்கவும் வலியுறுத்தி நடைபெற்ற ஒன்றுகூடல்

ரஷியா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்த வேண்டும், நேட்டோ அமைப்பை கலைக்க வேண்டும், உக்ரைனின் இனவெறி-வலதுசாரி-நாஜிக்களை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை முன்வைத்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, 01-03-2022 செவ்வாய் மாலை மே பதினேழு இயக்கம் சார்பாக ஒன்றுகூடல் நடைபெற்றது.

இதில் சிபிஐ மாநில துணைச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் தோழர் ஐ.ஆறுமுகநயினார், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தோழர் தமிமுன் அன்சாரி, விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் வன்னியரசு, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தோழர் தனியரசு, தமிழக மக்கள் புரட்சிக் கழகம் தலைவர் தோழர் அரங்க குணசேகரன், தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், திவிக தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிக்குமரன், தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினா் தோழர் புதுமடம் ஹலீம், எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் தோழர் முஹம்மது உசேன், தமிழர் விடுதலை கழகம் தலைவர் தோழர் சுந்தரமூர்த்தி, திராவிடத் தமிழர் கட்சி தோழர் சங்கர், பூவுலகின் நண்பர்கள் தோழர் வெற்றிச்செல்வன், சம்யுக்த கிசான் மோர்ச்சா மாநில செயலாளர் தோழர் பாலகிருஷ்ணனன், திரைப்பட கலைஞர் தோழர் கவிதா பாரதி, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply