மே பதினேழு இயக்கத்தின் ஆரம்ப காலம்தொட்டு, இயக்கத்தின் மீதும் இயக்க செயல்பாடுகளில் மீதும் நம்பிக்கை வைத்து இறுதிவரை உறுதுணையாக இருந்த தோழர் ஹரிஹரன் இன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.
கடந்த ஒரு வருடமாக புற்றுநோயுடன் போராடியவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மறைந்துவிட்டார்.
தனித்தமீழம், தமிழ் தேசியம் என்கிற இருபெரும் லட்சியத்திற்காக தனது குடும்பத்தை கூட இரண்டாம் பட்சமாக நினைத்து முழுநேரமாக களத்தில் போராடிய போராளி ஹரிகரன். எப்படியாயினும் நிரபராதி 7 தமிழர்களை விடுதலை செய்துவிட வேண்டும் என்று கடந்து 11ஆண்டுகளாக அதிதீவிரமாக இறுதி காலம் வரை களமாடியவர்.
மே பதினேழு இயக்கத்தின் ஆரம்ப காலம் தொட்டு மே 17 இயக்கத்தின் அனைத்து வேலைகளிலும் முன்னனியில் நின்று எடுத்து செயல்படுத்திய செயல்வீரர். தமிழர் வரலாறு, திராவிட இயக்க வரலாறு, தமிழீழ வரலாறு, மார்க்சிய வரலாறு, தமிழக பண்பாடு, தமிழர் சமயவழிபாடு என்று எது குறித்தும் அவருடன் பேசலாம். கணிப்பொறியில் ஆழ்ந்த புலமை பெற்றவர். சுருக்கமாக சொல்வதானால் ஒரு பன்முக வித்தகர் ஹரிஹரன். அப்படிப்பட்டவர் புற்றுநோயினால் இறந்தது வேதனை அளிக்கிறது.
தோழர் ஹரிஹரன் மறைவு மே பதினேழு இயக்கத்திற்கும் தமிழ்சமூகத்திற்கும் மாபெரும் ஈடு செய்ய முடியாத இழப்பு. தோழர் ஹரிஹரனுக்கு மே பதினேழு இயக்கத்தின் செம்மார்ந்த வீரவணக்கம்!
தகவல் மற்றும் தொடர்புக்கு: 9176331700
மே பதினேழு இயக்கம்
9884864010