கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பில் கைவைத்த மோடி அரசு தற்போது உணவுப் பாதுகாப்பிற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் வேட்டு வைத்திருக்கிறது.
மோடி அரசு இன்று கொண்டு வந்திருக்கிற அத்தியாவசிய பொருட்களுக்கான மசோதா Essential Commodities (Amendment) Bill உணவு தானியங்கள் போன்றவற்றை தடையின்றி பதுக்குவதற்கும், வரையரையின்றி (இருமடங்கு உயர்வுவரை) விலையேற்றுவதற்கும் அனுமதியளிக்கிறது.
இந்த உயர்வை நெருக்கடி காலத்தில் மட்டுமே அரசு இதை கட்டுப்படுத்தலாமென்கிறது. அதாவது சாமானிய காலத்தில் வெங்காயம் ரூ100லிருந்து ரூ 200 வரை உயர்வதை அரசு தடுக்கவேண்டுமெனில் நாட்டில் நெருக்கடி(பூகம்பம், வெள்ளம..) இருந்தால் மட்டுமே சாத்தியம் என்கிறது. இது செயற்கை பஞ்சத்தையும், கார்ப்பரேட்டுகள் தானியங்களை வரைய்றையின்றி பதுக்கவும் வழிவகுக்கும்.
ரிலையன்ஸ், வால்மார்ட் போன்றவை லாபம் கொழிக்க வழி செய்யும் திட்டமிது. மேலும் விவசாயிகளை அழிக்கவும், சுரண்டவும் இம்மசோதா உதவி செய்கிறது. உணவுப் பஞ்சங்களை, பற்றக்குறையை தடுக்க 1955இல் கொண்டுவரப்பட்ட சட்டத்தை திருத்தியிருக்கிறது மோடி -இந்துத்துவ அரசு. இனி வரும் காலங்கள் கார்ப்பரேட்டுக்கான காலமென்கிறது மோடி அரசு.
வெள்ளையர் காலத்தில் இருந்த உணவுக் கொள்ளைக்கு இணையான சூழலை இச்சட்டத்திருத்தம் உருவாக்குகிறது. உணவு தானியங்கள், காய்கறிகளை வணிக நோக்கிலான பதுக்கலுக்கும், லாப நோக்கிலான விலை உயர்விற்கும் தள்ளிய வெள்ளை காலனிய அரசின் திட்டங்களே இந்தியாவில் பெரும் பஞ்சத்தைக் கொண்டு வந்தன.
பொருளாதார வீழ்ச்சியை மட்டுமல்ல, இனி பஞ்சங்களையும் எதிர்பார்க்கலாம்
-தோழர் திருமுருகன் காந்தி